உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2


.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 2

அரிகேசரி பராக்கிரமபாண்டியன்

10. அரிகே சரிமன் பராக்கிரம மாற னரனருளால் வரிசேர் பொழிலணி தென்காசிக் கோயில் வகுத்துவலம் புரிசேர் கடற்புவி போற்றவைத் தேனன்பு பூண்டிதனைத் திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதமென் சென்னியதே.

11. பூந்தண் பொழில்புடை சூழுந்தென் காசியைப்பூதலத்திற் றாந்தங் கிளையுட னேபுரப் பார்கள்செந் தாமரையாள் காந்தன் பராக்ரமக் கைதவன் மான கவசன்கொற்கை வேந்தன் பணிபவ ராகியெந் நாளும் விளங்குவரே. 12. மென்காசை மாமல ரன்னமெய் யோற்கும் விரிஞ்சனுக்கும் வன்காசு தீர்த்திடும் விச்சுவ நாதன் மகிழ்ந்திருக்கப் பொன்காசை மெய்யென்று தேடிப் புதைக்குமிப் பூதலத்துத் தென்காசி கண்ட பெருமாள் பராக்மத்தென்னவனே.

13. அணிகொண்ட விந்த வணங்குமொன் றேயடி யேற்குனக்கு மணிகொண்ட வாசன் மணியுமொன் றேபகை மன்னரையும் பிணிகொண்ட காரையு முந்நீரை யும்பெரும் பூதத்தையும் பணிகொண்ட செண்பகத் தென்னா பராக்கிரம பாண்டியனே.

14. ஓங்கு நிலையொன்ப துற்றதிருக் கோபுரமும் பாங்குபதி னொன்று பயில் தூணும் -தேங்குபுகழ் மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி தன்னிலன்றி யுண்டோ தலத்து.

வீரபாண்டியன்

15. சேணுலவு வெண்டிங்கட் செல்வனெனத் தண்ணென்று

நீணிலமோ ரேழு நிழற்றுமே - பேணிவந்து

பூவேந்த ரேத்தும் புகழ்வீர பாண்டியனங் கோவேந்தன் கொற்றக் குடை.

(10-14) Travancore Archaeological Series, Vol. I, part VI, p. 97.

(15) Ibid, p. 115