பக்கம்:தீபம் யுகம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 39 இரண்டாவது ஆண்டு நிறைவின் போதும் தீபம் தனியாக ஆண்டு மலர் தயாரித்து வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டு மலரை உருவாக்கி வெளியிடும் போதும் அடுத்த ஆண்டு மலரை இதை விட இன்னும் சிறந்த முறையில் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வமே மேலோங்கி நிற்கிறது. இப்படி வளரும் எங்களது ஆர்வம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்பட முடியுமானால் அதுவே நாங்கள் பெறும் பயனாக இருக்கும் என்று நா. பா. குறிப்பிட்டுள் 领言fr汗。 திருச்சிற்றம்பலக் கவிராயர், தமிழன்பன், சிவம் கவிதைகள். கு. அழகிரிசாமி, அசோகமித்திரன், ஆர்.வி. வியார்ஜி, லா.ச.ரா. சூடா மணி, ஆ. மாதவன், தி.சா. ராஜூ, ராஜம் கிருஷ்ணன், தி. ஜானகிரா மன், வல்லிக்கண்ணன், கே. ராமசாமி, சார்வாகன் கதைகள், ஜெய காந்தன், ந. சிதம்பர சுப்பிரமணியன், நா. மகாலிங்கம், கி. சந்திரசேக ரன், தி.ஜ.ர. அகிலன், க.நா.சு, இந்திரா பார்த்தசாரதி, சி. கனகசபா பதி, டி.டி. விஜயராகவன், கே.எஸ். பூரீனிவாசன், கி. கஸ்தூரிரங்கன், கனக. செந்திநாதன் கட்டுரைகள். இரண்டு ஆண்டு மலர்களும் இலக்கியப் பிரியர்களுக்கு மனதி றைவு தரும் அருமையான விருந்தாகவே அமைந்திருந்தன. பின்னர், ஆண்டுதோறும் தனியாக மலர் உருவாக்கி வெளியிடுவது சாத்திமில் லாது போயிற்று. ஆயினும், ஏப்ரல் மாத இதழையே அதிகப் பக்கங்க ளுடன், விசேஷமான கட்டுரைகள் கதைகளோடு, வெளியிட்டது தீபம். 'மறுபடியும் மறுபடியும் தமிழ்ப் பெருமக்களுக்கு நாங்கள் நினைவூட்டுவதெல்லாம் நல்ல இலக்கிய ஏடுகளை உரிய காலத்தில் உரிய பிடிவாதத்தோடு ஆதரிக்க வேண்டும் என்பதே என்று நா. பா. அன்பு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். 'நாட்டில் நன்றாகப் படித்தவர்களிடம் கூட ஆழமான அம்சங்க ளும் அழுத்தமான அம்சங்களும் உள்ள இலக்கியப் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் குறைவாயிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும்' என்று நா. பா. வலியுறுத்தினார். ஆண்டு மலர்கள் தவிர, தீபம் இரண்டு இலக்கிய மலர்களை தயாரித்து வெளியிட்டது. ஒன்று. 1969 மார்ச்சில் வந்த மலேசிய இலக்கிய மலர். மற்றது. 1969 ஜூன் மாதம் வெளியான ஈழத்து இலக்கிய மலர். தீபம் அந்தந்த மாதத்திய இதழ்களே - வழக்கமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/100&oldid=923188" இலிருந்து மீள்விக்கப்பட்டது