பக்கம்:தீபம் யுகம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படியும் அந்த இடம் சேர்ந்து பூக்களைப் பார்ப்பதுடன், நினைவுச் சின்னமாகக் கொஞ்சம் பூக்களைப் பறித்தே தீர்வது என்று உறுதி பூண்டார். அலைந்து திரிந்து முடிவில் வெற்றியும் கண்டார். அந்த அனுபவங்களை குறிஞ்சி மலர்ந்திருக்கிறது!’ என்ற கட்டுரையாக தீபத்தில் எழுதினார் நா. பா. அவர் பறித்து வந்த குறிஞ்சி மலர்க்கொத்து ஞாபகச் சின்னமாக தீபம் அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1977ல் நா. பா. வும் முக்கிய எழுத்தாளர்கள் சிலரும் கல்கத்தா சென்றதையும் குறிப்பிட வேண்டும். - தமிழ் நாவல் நூற்றாண்டு 1977ல் கொண்டாடப்பட்டது. கல் கத்தா தமிழ்ச் சங்கம் நண்பர்களும் அவ்விழாவை கொண்டாட ஏற் பாடு செய்தார்கள். நா. பா. வையும் அவர் நண்பர்களையும் அழைத் தார்கள். நா.பா., அசோகமித்திரன், ஞானக்கூத்தன், மு. மேத்தா, சேவற் கொடியோன், நடராஜன், வல்லிக்கண்ணன் 1977 நவம்பரில் கல் கத்தா சென்று ஒரு வாரம் தங்கி விழாவில் கலந்து கொண்டார்கள். விழா சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய நண்பர்கள் நவம்பரில் சென்னையிலிருந்து புறப்படும் போதே நல்ல மழை. புயல் வரும் என்று எச்சரிக்கை அறிவிக்கப்பட்ட வாறு இருந்தது. புயல் திருவல்லிக்கேணியைத் தாக்கக்கூடும் என் றொரு பயம் நிலவியது. பயணம் சுகமாகவும் இனிமையாகவுமிருந்தது. நண்பர்கள் சென்ற ரயிலுக்குப் பின்னாலேயே புயலும் பயணம் செய்திருக்கிறது. திருவல்லிக்கேணியை விட்டு விட்டு புயல் ஆந்திரா பக்கம் நகர்ந்துள் ளது. புயல் பற்றியும் அதன் தாக்குதல் குறித்தும் செய்திகளை அறிந்த கல்கத்தா நண்பர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். நல்ல படியாக வந்து சேர்ந்த இலக்கிய நண்பர்களை உற்சாகத்தோடு பெரும் மகிழ்ச் சியோடும் வரவேற்றார்கள். புயலின் செய்தியையும் அறிவித்தார்கள். புயலினால் ரயில் பாதை சேதடைந்திருந்ததால் ரயில்போக்குவ ரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ரயில் மீண்டும் ஒடுகிற வரை நண்பர்கள் கல்கத்தாவில் தங்க வேண்டியதாயிற்று. அந்த மாநகரத்தை நன்கு சுற்றிப் பார்க்கக் கூடிய வாய்ப்பு ஆக அது அமைந்திருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/103&oldid=923191" இலிருந்து மீள்விக்கப்பட்டது