பக்கம்:தீபம் யுகம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. தீபம் யுகம் "பவர் எழுத்தாளர் சங்கமாக மட்டும் இயங்காது. நமது சமூக, கலாசார, அறிவு வளர்ச்சிக்கேற்ற துறைகளில் சிந்தனைத் தரத்தை உயர்த்தும் பொதுவான பலதுறை நோக்கங்கள் பவருக்கு உண்டு. கல்வி, நமது ரசனை எல்லாவற்றிலும் சிந்தனைத் தரம் உயரப் பாடுப டுவதற்காகப் பவர் உருவாகிறது. 1.1.69 அன்று மாலை தீபம் காரியாலயத்தில் தினமணி ஆசிரி யர் உயர்திரு ஏ.என். சிவராமன் அவர்கள் பவரைத் தொடங்கி வைத்தார். பேராசிரியர் பாஸ்கரன், எம். கோவிந்தன் (மலையாள இலக்கியம்), ஆருத்ரா (தெலுங்கு இலக்கியம்), கு.அழகிரிசாமி, பி. எஸ். ராமையா (தமிழ் இலக்கியம்) ஆகியோர் பேசினார்கள். இந்த இலக்கிய நல்லுறவு நிறுவனம் வளரவும், இதில் கலந்து பரஸ்பர நன்மையடையவும் அனைவரும் அழைக்கப்பட்டார்கள். நிர்வாக ரீதியிலும், உறுப்பினர்களை ஏற்பதிலும் பவருக்குச் சில திட்டவட்டமான, கண்டிப்பான, வரையறைகள் உண்டு. ஆயினும் தரமான தமிழ் எழுத்து, சுமுகமான உறவு, சிந்தனைத் தரம், பாரதப் பண்பாடு, பரஸ்பர நல்லெண்ணம் இவைகளை நம்பும் மேற்கண்ட ஐந்து பிரிவினரில் எவரையும் பவர் தன்னுடையவராக ஏற்றுக் கொள் ளத் தயங்காது. பவரின் நோக்கங்கள் பெரியவை. பரந்தவை. அந்தப் பெரிய விரிந்த நோக்கங்களுடன் நம்பிக்கையுள்ளவர்கள் இணைந்து நெருங்குகிறார்கள் என்று நா. பா. அறிவித்தார். 'பவர் கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன. அனுபவ முள்ள எழுத்தாளர்கள் சிறுகதை, நாவல்கள் பற்றி சொற்பொழிவாற் றினார்கள். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. 1969 மார்ச் 9, 16, 23, 30 தேதிகளில் தமிழச் சிறுகதைகள் பற்றிய கோடை இலக்கிய வகுப்புகள் நடைபெற்றன. 1970 ஜனவரி 17, 18 தேதிகளில் பவர் ஆண்டுவிழா விமரிசை யாக நிகழ்ந்தது. இலட்சிய நோக்குடைய உயர்ந்த, சீரிய முயற்சிகள் போலவே "பவர் நிறுவனமும் அற்பாயுளில் இயக்கமற்றுப் போய்விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/105&oldid=923193" இலிருந்து மீள்விக்கப்பட்டது