பக்கம்:தீபம் யுகம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 107 தீபத்தின் பொருளாதார சிரமங்கள் குறையவில்லை. பொருளா தார சிக்கன்ம் கருதி பத்திரிகையின் வடிவத்தை மாற்றி அமைக்கத் திட்டமிட்டார் நா. பா.' 17வது ஆண்டில் (ஜனவரி 1982) 'தீபம்’ சிறிய அளவு வடிவம் பெற்றது. வழக்கமான 'தீபம் இரட்டையாக மடிக்கப்பட்டது போல, கிரவுன் 1x4என்று ஆக்கப்பட்டது. 202 வது இதழ் அது. அதில் விளக்கம் அறிவிக்கப்பட்டது. "புற வடிவம் மாறியிருக்கிறது. பொருளாதார சிக்கனம் கருதியே இந்த வடிவ மாற்றம் தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வாமன உருவம் கொள்வது விரைவில் விஸ்வரூபம் கொள்ளம் பொருட்டே பத்திரிக்கையைப் பொறுத்த வரைவிஸ்வரூபம் என்பது வெறும் வடிவத்தைப் பொறுத்ததில்லை. உள்ளடக்கத்தையும் பொறுத் ததே. கடுகு சிறுத்தாலும் காரம் மட்டும் போவதில்லை. பல்லால் கடித் தால் நாக்குப் பதறுகிற அளவிலான ஊசிமிளகாய்க் காரம் தீபத்தில் இன்னும் அதிகமாகப் போகிறது. காரம் மட்டுமல்ல - சாரமும் கூட மிகமிக அதிகமாகும் என வாசகர்கள் உள்ளடக்கம் நிறையவே பார்க் கலாம்.' ஆயினும் இந்தக் குறள் வடிவம் எடுபடவில்லை. வாசகர்கள் அதை விரும்பவில்லை. எனினும், ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தீபம் சிறிய சைலிலேயே வெளிவந்தது. மீண்டும், 1983 அக்டோபர் தீபாவளி இதழ் முதல் அது பெரிய அளவில் வரத் தொடங்கியது. அது தீபத்தின் 223வது இதழ் ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/108&oldid=923196" இலிருந்து மீள்விக்கப்பட்டது