பக்கம்:தீபம் யுகம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீபம் யுகம் i Ç § 19. இலட்சியப் பாதையில் தீபம் கலை, இலக்கிய வளர்ச்சியில் அக்கறை கொண்டிருந்த தைப் போலவே, நாட்டின் தொழில் மற்றும் அறிவியல் துறைகளின் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டி வந்தது. புதிய தொழிலகங்களை தீபம் அறிமுகம் செய்ய முன்வந்தது. வடலூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த பீங்கான் தொழிற்சாலை, பி.எஸ்.ஜி. அறக்கட்டளையின் தொழிற்சாலை போன்றவற்றை அறி முகம் செய்து கட்டுரைகள் எழுதப்பட்டன. சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரிவோரை தீபம் உற் சாகப்படுத்திப் பாராட்டியது. அவர்களைப் பற்றி பொதுப் பணியில் இவர்கள் என்று எழுதி ஊக்குவித்தது. இசைத்துறையைச் சேர்ந்த எஸ். சேதுராமன், விவசாயத்துறை எ. முனிசாமி முதலியார், தொழி லாளர் தலைவர் எஸ். குருமூர்த்தி, புத்தக வெளியீட்டாளர் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் எஸ்.டி. சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் மூக்கையாத் தேவர். பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ராமகிருஷ் ணன், கல்வியாளர் எஸ். ராஜகோபாலன், போக்குவரத்துத் துறை டைரக்டர் டி.வி. வெங்கட்ராமன், பொதுத் தொண்டு புரிந்து வந்த வி. ஆர். ராதாகிருஷ்ணன், உழைக்கும் பத்திரிகையாளர் எஸ். மீனாட்சி சுந்தரம் - இப்படி அநேக சாதனையாளர்களை தீபம் பாராட் டியுள்ளது. அவ்வப்போது கலை இலக்கிய சமூகப் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்து மனத்தில் தோன்றிய கருத்துக்களை நா. பா. 'எனது குறிப்பேடு என்ற பகுதியில் எழுதி வந்தார். 1974 ஜனவரி இதழிலிருந்து தொடங்கி, மாதம் தோறும் இந்தப் பகுதி தொடர்ந்து வந்தது. நா. பா.வின் மனம் திறந்த அபிப்பிராயங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. தீபம் ஒரே ஒரு முறை சிறுகதைப் போட்டி அறிவித்தது. அதன் இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி இந்தப் போட்டி அறிவிக்கப்பட் டது. போட்டிக்கு வந்த கதை சிறுகதைகளை பரிசீலனை செய்து, மூன்று கதைகள் தேந்தெடுக்கப்பட்டன. பரிசு பெற்ற கதைகள் 1985 தீபாவளி மலரில் பிரசுரிக்கப்பட்டன. பரிசு பெற்றவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/109&oldid=923197" இலிருந்து மீள்விக்கப்பட்டது