பக்கம்:தீபம் யுகம்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13.0 தீபம் யுகம் நம்பி இருக்கவில்லை. உழைப்பும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சி யுமே எனது நினைவில் உள்ளன. இவ்விதம் மனஉறுதியோடும் தன்னம்பிக்கையோடும் உழைத்து வளர்ச்சிப் பாதையில் வெற்றிகரமாக முன்னேறிக்கொண்டி ருந்த நா. பா. அவரை நம்பியிருந்த குடும்பத்தினரையும் தீபம் பத்திரி கையையும் திடீரென விட்டுப் பிரிந்து சென்றார். இது அனைவருக் கும் ஈடு செய்ய முடியாத இழப்பு தான். இலக்கியப் பத்திரிகை தீபத்துக்கும் இலக்கியவாதிகளுக்கும். அவர் மறைவு ஒரு பேரிழப்பேயாகும். 'தீபம் 1988 ஜனவரி-பிப்ரவரி இதழ் அமரராகிவிட்ட நா. பா.வுக்கு அஞ்சலி செலுத்தியது. நா. பா. இறக்கவில்லை. அவர் எழுத்துக்களில் அவர் வாழ்கிறார். அவர் லட்சியங்களில் அவர் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார் என்று கூறியது. மார்ச் மாதம் 269வது இதழ் வெளியாயிற்று. அமரராகிவிட்ட எழுத்தாளர் அகிலனுக்கு அது அஞ்சலி செலுத்தியது. 1988 ஜனவரி 31ம் நாள், தமது 66வது வயதில், அகிலன் அமரராகியிருந்தார். எஸ். திருமலை தயாரித்து வெளியிட்ட இந்த இதழில் நா. பா. நினைவுகள் பற்றி எஸ். கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வழக்க மான இதர அம்சங்களும் இடம் பெற்றிருந்தன. தீபம் 270வது இதழ் ஏப்ரல்-மே என்று குறிப்பிடப்பட்டு வெளி வந்தது. அது தான் இறுதி இதழாக அமைந்து விட்டது. அதற்குப் பிறகு தீபம் வெளிவரவில்லை. தனது இருபத்து மூன்றாவது ஆண்டு நிறைவுடன் தீபம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/111&oldid=923200" இலிருந்து மீள்விக்கப்பட்டது