பக்கம்:தீபம் யுகம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் Í Í 1 20. தீப ஒளி தீபம் இலக்கிய இதழ் மட்டுமல்ல; தீபம் ஒரு இலக்கிய இயக்க மும் கூட. இவ்வாறு நா. பா. அடிக்கடி குறிப்பிட்டிருக்கிறார். எழுத்தாளர்களின் உரிமைக்காகவும் நியாயங்களுக்காகவும் இடையறாத போராட்டம் - தீபம் என்ற இலக்கிய யுத்தம் என்றும் அவர் எழுதியிருக்கிறார். (இதழ். 219. ஜூன் 1983) இதன் உண்மையை தீபத்தின் பக்கங்கள் - முக்கியமாக, நா. பா. எழுதிய தலையங்கங்கள் - நிரூபிக்கும். நாட்டின் நன்மைக்கும் பண் பாட்டின் உயர்வுக்கும் உதவக்கூடிய சிறந்த விஷயங்களையே தீபம் பிரசுரித்துள்ளது. பண்பாட்டைச் சிதைக்கும்; வாழ்க்கையின் நலனை சீர்குலைக் கும் நச்சு எழுத்துக்களையும் நசிவுப் போக்குகளையும் வளர்க்கிற பத்திரிகைகளை வன்மையாகத் தாக்கி வந்திருக்கிறது தீபம். கால மாறுதல்களையும் கருத்து மாறுதல்களையும் தழுவிச் சென்று பரிணாம வளர்ச்சி பெற்று வந்தது தீபம், அதனால் சமுதாயப் பார்வைக்கு முக்கியத்துவம் கொடுத்தது. முற்போக்குப் பார்வையும் முற்போக்குச் சிந்தனைகளும் கொண்ட காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளே தேவை என்று வலியுறுத்தி வந்திருக்கிறது. அத்தகைய நாவல்களும் சிறுகதைகளும் குறுநாவல்களும் வெளிவரத் துணைபு ரிந்துள்ளது. படைப்பு இலக்கியம் வளம் பெற வகை செய்ததுடன், திரைப் பட விமர்சனத்துறை, இலக்கிய விமர்சனம், புதுக்கவிதை, கடித இலக்கியம் முதலியன வளரவும் தீபம் உதவியிருக்கிறது. அயல் மொழி இலக்கியங்களின் தொடர்பையும், சர்வதேசப் பார்வையை யும் வளர்த்து வந்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/112&oldid=923201" இலிருந்து மீள்விக்கப்பட்டது