பக்கம்:தீபம் யுகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'தீபம் இதழின் தொடக்கத்திலிருந்து நா.பா.வோடு நெருங்கிப் பழகி தீபம் வளர்ச்சியில் - நா.பா.வின் தோளோடு தோள் நின்று அக்கரையோடு பணியாற்றிய நண்பர்களிடமிருந்து நா.பா. பற்றியும் - அவரது 'தீபம் பற்றியும் விமர்சனக் கட்டுரைகள் பெற்று - அதனை ஒரு தொகுப்பு நூலாக வெளியிடும் முயற்சியில் இறங்கினேன். அப்போது - தமிழிலக்கிய விமர்சனக்கலையின் வழிகாட்டிக ளில் - முன்னோடிகளில் ஒருவரான திரு. தி.க.சி. அவர்களை நெல்லையில் அவரது இல்லத்தில் சந்தித்து எனது முயற்சி பற்றி உரையாடினேன். "கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடுவதைவிட தீபம் முதல் இதழிலிருந்து கடைசி இதழ் வரையில் தீபமும் - அதன் மூலம் அதன் ஆசிரியர் நா.பா.வும் ஆற்றிய இலக்கியப்பணிகளை தீபம் யுகம் என்ற தலைப்பில் விமர்சித்து எழுதினால் அது தமிழ் உள்ள வரையில் நா.பா.வையும் அவரது தீபத்தையும் நினைவுபடுத்திக் கொண்டே இருப்பதாக அமையும்' என்றார் தி.க.சி. அந்த நூலைத் திறம்பட எழுதக்கூடியவர் யார் என்பதையும் அவரே பரிந்துரை செய்தார். 'மணிக்கொடிகாலம் போல சரஸ்வதி காலத்தையும் அற்புத மாக எழுதிய வல்லிக்கண்ணன் அவர்களைக் கொண்டே 'தீபம்யுகம்' பற்றிய ஆய்வுநூலையும் எழுத வேண்டும் என்பதே அவரது விருப் பம் திரு. வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்து - இதனைத் தெரி வித்தபோது அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். நா.பா. அவர்களது இல்லம் சென்று அவரது துணைவியார் திருமதி சுந்தரவல்லி பார்த்தசாரதியிடமும் அவரது அருமைச் செல் வங்களான மகன் - மகள்கள் ஆகியோரிடமும் இதுபற்றிப் பேசி னேன். புத்தகம் எழுதுவதற்கு உதவியாக - தீபம் முதல் இதழிலிருந்து கடைசி இதழ் வரையிலான 23 ஆண்டுகளுக்கான தொகுப்புகளை அவர்கள் மனமுவந்து எடுத்துக்கொடுத்தார்கள் அவர்கள். 'தீபம் யுகம் வெளிவர - மிகப்பெரிய உதவியாக இருந்தது அவர்களது ஆதரவும் நல்வாழ்த்துக்களும்தான். இந்த சந்தர்ப்பத்தில் தீபம் தொடக்க நாள் முதல் - நா.பா.வின் மறைவுக்குப்பிறகும் சில இதழ்கள் வெளிவர உழைத்த அவரது உற வினர் திரு. சு.திருமலை, தீபம் தொடக்க இதழ் முதல் கடைசி இதழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/13&oldid=923205" இலிருந்து மீள்விக்கப்பட்டது