பக்கம்:தீபம் யுகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தீபம் யுகம் ாலேயே இதைதான் தொடங்க வேண்டுமென்ற இயல்பான ஆசை நியாயமான ஆசை எனக்கு இதை நான் துணிந்து மேற்கொள்ள வேண்டியவனாகிறேன். இந்த வழியில் இலட்சிய வேகமுள்ள பல நல்ல எழுத்தாளர்கள் ஏற்கெ னவே தொடர்ந்து சென்று ஒருவர் பின் ஒருவராகத் தோற்றிருக்கிறார் கள் என்பதனாலேயே அவர்கள் சார்பில், அவர்களுடைய தோல்விக ளுக்கெல்லாம் வட்டியாக இதில் நான் வெற்றி பெற வேண்டுமென்ற தன்னம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. இந்தத் தன்னம்பிக்கை தான் என்னிடம் நான் வெற்றி பெறுவதற்காக வைத்திருக்கும் வைரம் பாய்ந்த ஆயுதம் என்று. ஒரு பிரகடனம் போல, அவர் அறிவித்தார். மேடு பள்ளம் நிறைந்த பாதை எனத் தெரிந்தும், துணிந்து நடப்பதற்காக வலது காலை முன்னெடுத்து வைத்து நா.பா. 'தீபம்' இதழை தொடங்கியது 1965 ஏப்ரல் மாதம் - சித்திரை முதல் நாளில், அப்போது அவர் தமிழ் உலகம் நன்கறிந்த நல்ல எழுத்தாளராகப் புகழ் பெற்றிருந்தார். மதுரையில் தமிழ்ச்சங்கத்தில் பயிற்சிபெற்றுத்தேர்ந்து, வற்றாயி ருப்பு என்ற சிற்றுரில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த காலத்திலேயே அவர் எழுத ஆரம்பித்துவிட்டார். இலட்சியக்கதை மாந்தர்களையும், சீரிய நோக்கங்களையும், அழகான சிந்தனைச்சுடர்களையும், இனிய தமிழ் நடையையம், வளமான கற்பனையையும், வாழ்க்கையின் பிரதிபலிப்புகளையும் கொண்டிருந்த அவருடைய படைப்புகள் தமிழ் கூறும் நல் உலகம் எங்கும் பரவியிருந்த தரமான வாசகர்க ளைக் கவர்ந்தன. குறிஞ்சி மலர் பொன் விலங்கு ஆகிய புனைக தைகள் நா.பா.வின் எழுத்தாற்றலை எடுத்துக்காட்டின. அவை அவ ருக்கு எண்ணற்ற வாசகர்களை - அபிமானிகளை இலக்கிய நண்பர் களை பெற்றுத்தந்தன. அவருடைய நாவல்களின் கதைமாந்தர்களை அவரவர் குடும்ப அங்கத்தினர்கள் போலவும், அவர்களுக்கு ஏற் பட்ட அனுபவங்களை அவரவர் சொந்தக்காரர்களுக்கு எதிர்பட்ட சுகதுக்கங்கள் போலவும் எண்ணற்ற வாசகர்கள் எண்ணுகிற அள வுக்கு நா.பா.வின் எழுத்தாற்றல் ரசிகர்களின் உள்ளங்களை ஈர்த்தி ருந்தது. 'கல்கி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் அவர் எழுதிய படைப்புகள் பலவும் தமிழ் வாசகர் உலகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/17&oldid=923209" இலிருந்து மீள்விக்கப்பட்டது