பக்கம்:தீபம் யுகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 தீபம் யுகம் தாயினும், அப்பொருள் மெய்ப்பொருள் காணும் முயற்சி வேண்டும். ஆய்ந்த சுயமுடிவு வேண்டும். அதுவே திட சங்கல்பமாய் கொண்டு, சலியாமல் செயலாற்ற வேண்டும். மனச்சாட்சியே பார்த்தன். மதியே (பத்திரிகைத் தொழில் - ஒரு கண்ணோட்டம். - தி.ஐ.ர. 'தீபம்' 2வது இதழில்.) இப்பண்புகளை பெற்றிருந்த நா.பா.வின் 'தீபம் முதலாவது இதழ் நல்ல வெற்றியாகவும், நம்பிக்கை அளிக்கும் ஒளிச்சுடராகவும் திகழ்ந்தது. முதலாவது இதழ் பெற்ற வரவேற்பும், அதனால் கிடைத்த பாராட்டுக்களும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கத்தான் செய்தன. ஆயி னும் நா.பா. கருமமே கண்ணாக உழைத்து, மிகுந்த சிரமங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதை அவர் ஒரு நோன்பு ஆக, தவம் ஆகவே மேற்கொண்டு, தன்னையே முழுமையாகத்தன் பத்திரி கைக்காக அர்ப்பணித்துக் கொண்டார். 'எனக்குச் சாப்பிடவும் நினைவில்லாது இப்பத்திரிகை சம்பந்த மான பல காரியங்கள் என்னைச் சூழ்ந்து விடுகின்றன. மெய் வருத் தம் பாராமல், பசி நோக்காமல், கண் துஞ்சாமல், எவ்வெவர் தீமை யும் போட்டியும் பொறாமையும் பாராமல், கருமமே கண்ணாக நான் என் தீபத்தை மேலும் மேலும் நன்கு பிரகாசிக்கச் செய்யும் காரியங்க ளைச் செய்து - விடாப்பிடியாக முயன்று கொண்டிருக்கிறேன். எனக்கு இன்றும் - இனி என்றும் - இது ஒரு நோன்பு - தவம். 'என்னிடம் சிந்தனையையும் எழுத்தையும் தவிர அதிகமான வசதிகள் ஒன்றுமில்லை என்பதை நானே உணர்கிறேன். நான் ஒரு சாதாரண இலக்கியத் தொழிலாளி என்பதும் எனக்குப் புரிகிறது. நான் பணத்தினால் ஏழையாகவும் - மனத்தினால் குபேரனாகவும் இருப்பதாக எனக்கே தோன்றுகிறது. உடல் நலமில்லாத கணவன் கட்டிலருகே - அவன் நிச்சயம் பிழைத்துவிடுவான் - பிழைக்க வேண்டும் - என்று ஒரே நம்பிக்கையை மனத்தின் தவமாக கொண்டு வேறு விதமாக நினைப்பதைக் கூடத் தன் கற்பிற்குப் பங்கமாய் எண்ணும் ஒர் இந்துக்குடும்பத்துசகதர்மிணியைப்போல் என்முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/19&oldid=923211" இலிருந்து மீள்விக்கப்பட்டது