பக்கம்:தீபம் யுகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 21 லாம் கூட மகிழ்ச்சிகளாகின்றன. சுய மரியாதையும் தன்மானமும் தொழில் நாணயமும் மிக்க, ஒரு சிறிய நிலத்தைச் சொந்தமாக உழு கின்ற நாட்டுப்புறத்து உழவனின் அசல் பெருமிதத்தைப் போன்ற பெருமிதமாக இது எங்களுக்குத் தோன்றுகிறது. இந்த இலக்கிய உழவின் போது கொழுமுனையில் வளமான மண்புரளுவதற்குப் பதில் கனமான கற்கள் மோதுவதும் உண்டு. ஆனால் அவற்றால் எங்கள் இலட்சிய தாகம் தடைப்பட்டு விடுவதில்லை. புதுப்பத்திரிகைகள் எவ்வளவு நல்ல இலட்சியங்களோடு வந் தாலும் நிலைப்பதில்லை என்று, அப்படி நிலைக்க விடாமற் செய்வ தில் தாங்களும் கணிசமான குற்றம் புரிந்திருப்பதை மறந்தே, இங்கு பலர் பேசுகிறார்கள். பிடிவாதத்துடனும், நல்ல நோக்கத்துடனும் தோன்றிய பல சிறந்த இலக்கியப் பத்திரிகைகள் தீபத்திற்கு முன்னும் தமிழில் உண்டு. ஆனால் அவற்றைத் தமிழ் வாசகர்களும் விற்பனை யாளர்களும் அனுதாபத்துடன் உரிய காலங்களில் கவனித்து வளர்க்க வில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். தண்ணீருற்ற மறந்து விட்டு செடி வாடுவதைப் பற்றிக் கவலைப் படுவதிலோ குறை சொல் வதிலோ என்ன அனுதாபம் இருக்க முடியும்? நல்ல இலக்கியச் சூழ்நிலை உருவாகப் பாடுபடும் ஒவ்வொரு தமிழ்ப் பத்திரிகையையும் வளர்க்கும் முனைப்பு தமிழர்களுக்கு உடனே வர வேண்டும். பகட்டுக்கும் டம்பத்துக்கும் இரையாகிற மனப்பான்மையும் புதுமையை வரவேற்கத் தயங்குகிற மனப்பான் மையும் மாற வேண்டும். பத்திரிகை நடத்துகிறவர் எத்தனை இலட்சம் முதலீடு செய்ய முடிந்தவர் என்று லேவாதேவிக் கணக்குப் பார்க்கும் மனப்பான் மையே பல தமிழர்களுக்கு இன்னும் இருக்கிறது. எவ்வளவு நல்ல எண்ணங்களை முதலீடு செய்ய முடிந்தவர் என்று பார்த்து ஆதரிக்கிற மனப்பான்மை இன்னும் வரவில்லை. வருந்திக் கண்ணீர் சிந்த வேண் டிய நிலைமை இது. குணத்தை வாயளவில் போற்றுகிறார்கள். பணத் தையும் பகட்டையும் மட்டுமே மதிக்கவும், மிரளவும், நம்பவும், பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/22&oldid=923214" இலிருந்து மீள்விக்கப்பட்டது