பக்கம்:தீபம் யுகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தீபம் யுகம் திலகரும் பாரதியும் தேசபக்தியை முதலீடாக வைத்துப் பத்திரி கைகள் தொடங்கி விடுதலைக்குப் போராடிய தேசம் இது என்பதை மறந்து விடுகிறார்கள். பதினைந்து கோடி முதலீடு செய்து ஒரு மோச மான ஆபாசத்தைத் தொடங்கினால் நம்பவும் பயப்படவும் செய்கி றார்கள். நான் முன்பு சொன்ன நாட்டுப்புறத்து தொழில் செய்கிற வனை மதிப்பதில்லை - மனிதனாகவும் நினைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் என்பதைத் தீபத்துக்கு மூன்றாவது வயது பிறக்கும் இச் சமயத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். நல்லதை ஆதரியுங்கள். பத்திரிகைத்துறையில் மட்டுமல்ல. எல் லாத்துறையிலும் நல்லதை அவசரமாகவும் தைரியமாகவும் ஆதரி யுங்கள். ஒருவேளை நீங்கள் தயங்குவதற்குள் கெட்டது வந்து மேலே மூடி விடலாம் என்பது ஞாபகமிருக்கட்டும். என்னுடைய தார்மீகக் கோபத்தோடு கூடிய இந்த நினைவுக ளைத் தீபம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் தீபத்தின் மூன்றாவது ஆண்டைத் தொடங்குகிறேன். மேலே சொன்ன குறை களை தீபத்தின் மனத்தாங்கல்களாக மட்டும் எடுத்துக் கொள்ளாமல், இமயம் முதல் குமரி வரை இந்தத் தேசத்தில் இலட்சியங்களுக்காகப் போராடும் எல்லா நல்ல பத்திரிகைக்காரர்களின் மனத்தாங்கல்களாக வும் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்." இரண்டாம் ஆண்டு நிறைவில் வெளியான 'தீபம் 24வது இத ழில் இப்படி ஒரு நீண்ட தலையங்கம் எழுதித் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் நா.பா. தமிழ் வாசகர்களின் கடமையை அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தத் தவறவில்லை. 'வளரும் எங்களது ஆர்வம் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்பட முடியுமானால் அதுவே நாங்கள் பெறும் பயனாக இருக்கும். ஏதாவது உப்புப்புளி போன்ற ஒரு வியாபாரத்திலோ, அல்லது கொள்முதலிலோ, கடை விற்பனையிலோ, அதிக லாபமில்லாமல் சிரமப்படுகிறவனுடைய அதே நஷ்டச்சோர்வு, இலக்கிய வியாபாரத் திலோ இலக்கியக் கொள்முதலிலோ ஈடுபடுகிறவனுக்கு வரக்கூடாது என்றெண்ணித்திடமாகச் செயல்படுகிறவர்கள் நாங்கள். சிரமப்படும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/23&oldid=923215" இலிருந்து மீள்விக்கப்பட்டது