பக்கம்:தீபம் யுகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 23 போதும் நஷ்டப்படும் போதும் தான் எங்களுக்குள்ளேயிருக்கிற தன்னபிக்கையும் முயற்சித்திறனும் மிகப் பெரிதாக விசுவரூபம் எடுக் கின்றன. இந்த நிலைமையை தீபத்தின் ஒவ்வொரு வாசகரும் உணர வேண்டுமென்று அன்போடு வேண்டிக்கொள்கிறோம். மறுபடியும் மறுபடியும் தமிழ்ப் பெருமக்களுக்கு நாங்கள் நினைவூட்டுவதெல் லாம் நல்ல இலக்கிய ஏடுகளை உரிய காலத்தில் உரிய பிடிவாதத் தோடு ஆதரிக்க வேண்டும் என்பதே' ('தீபம் இரண்டாது ஆண்டும லரில் நா.பா. எழுதியது.1967) 'தீபம் தனித்தன்மையோடு வளர்ந்து வந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்த நா.பா. அனைத்து இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சியையும் தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தினார். தமிழ் நாட்டி னர் தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள வேண் டும் என்பதோடு, இதர இந்திய மொழிகளின் புகழ் பெற்ற எழுத்தா ளர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் அக் கறை காட்டினார். அதன் பிரதிபலிப்பு 'தீபம்' இதழ்களில் பளிச்சிட் டது. இம்முயற்சியில் பொருளாதார சிரமங்களும் கஷ்ட நஷ்டங்க ளும் மிகுதியாகவே எதிர்ப்பட்டன. “ஒரு சீராய் - நிதானமாய் - ஒளிபரப்பும் மங்கலமான குத்து விளக்குப் போல் பதறாமல் - பயப்படாமல், நிதானமாய் தனது இலக்கியப் பணியை செய்து வருகிறது தீபம். ஆடம்பரமான மின் விளக்குகள் பல வந்து விட்டாலும் அகல் விளக்கும் குத்து விளக்கும் எப்படி பண்பாட்டின் மங்கலச் சின்னங்களோ, அப்படியே கவர்ச்சி யையே முக்கியமாகக் கொண்ட பல பத்திரிகைகளிடையே தீபம் போன்ற தீவிர இலக்கிய இலட்சியப் பத்திரிகைகளும் நமது கலை இலக்கியப் பண்பாட்டின் சின்னங்களாயிருக்க முடியும். நாட்டில் நன்றாகப் படித்தவர்களிடம் கூட ஆழமான அம்சங்க ளும் அழுத்தமான அம்சங்களும் உள்ள இலக்கியப்பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் குறைவாயிருக்கிறது. இந்த நிலை மாற வேண் டும். காபி அருந்துவது, திரைப்படம் பார்ப்பது போல் பத்திரிகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/24&oldid=923216" இலிருந்து மீள்விக்கப்பட்டது