பக்கம்:தீபம் யுகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠毒 தீபம் யுகம் படிப்பதும் ஒரு கவனத்துக்குரிய அம்சமாக வளர வேண்டும். தினப் பத்திரிகை படிக்கும் பழக்கத்தோடு அமைந்துவிடாமல் உணவில் வைட்டமின்கள் போல் இலக்கிய சக்திகளை நிறையத் தரும் பத்திரி கைகளையும் தேடிப்படிக்கும் பழக்கமும் ஆர்வமும் தமிழ் மக்களி டையே பெருகவேண்டும் என்பது தீபத்தின் அவாவும் இலட்சியமும் ஆகும்.' இவ்விதம் நா.பா. தீபம்'37வது இதழில் (ஆண்டுமலர்- ஏப்ரல் 1968) கருத்து தெரிவித்தார். "ஓர் இலக்கியப் பத்திரிகைக்குள்ள சிரமங்களும் பெருமிதங்க ளும் போல் உலகில் வேறு எதிலும் கிடையாது. சிரமப்படுவதால் தான் பெருமிதம் அடைய முடிகிறது. சிரமங்களைக் கடக்க முயல்வது தான் பெருமிதமாகவும் இருக்கிறது' என்ற உணர்வுடன் செயல் புரிந்தவர் நா.பா. அவரது பொருளாதார சிரமங்களை அவர் வெளி யிட விரும்பியதில்லை. தீபம் இதழை ஓர் இலக்கிய இயக்கமாக வளர்ப்பதிலேயே அவர் கருத்தாக இருந்தார். அவருடைய மன உறுதியும் அயராத உழைப்பும், அவரைப் போலவே மன உறுதியும் அவரிடம் பாசமும் அன்பும் கொண்டிருந்தவர்களின் ஒத்துழைப்பும், இவ்வகையில் அவருக்கு வெற்றி கிட்டச் செய்தன. இருப்பினும் அவர் செலுத்த நேர்ந்த விலை அதிகமாகவே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். "தீபத்தை பிடிவாதமாக நடத்தும் ஒரே திருப்திக்காக நான் சிலரது அதிருப்திகளையும் சம்பாதித்துக் கொண்டதுண்டு. இந்தப் பத்திரிகையை நான் தொடங்கும்போது எனக்கு மதுரையில் ஒரு வீடு இருந்தது. பத்திரிகையைக் காப்பாற்ற என் குடும்பத்தாருக்குச் சொல் லாமலேயே அதை நான் விற்க நேர்ந்து விட்டது. பத்திரிகை நடந்தாக வேண்டும் என்ற ஒரே திருப்திக்காக நான் என்னுடையவற்றை எல் லாம் இழப்பது குடும்பத்தினர்க்கும் சில நண்பர்களுக்கும் திருப்திய ளிக்கவில்லை தான் என்றாலும் எனக்குப் பத்திரிகை தான் எல்லாத் திருப்தியுமாக இருந்து வருகிறது. இனியும் அப்படியே இருக்கும்" என்று நா.பா., 1974 ஏப்ரலில் பத்தாவது ஆண்டு ஆரம்பத்தில், உறுதியாக அறிவித்தார். அதுவரை'தீபம் 108இதழ்களும், தனியாக 2 ஆண்டு மலர்களும் (ஆக 110 இதழ்கள்) பிரசுரிம் பெற்றிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/25&oldid=923217" இலிருந்து மீள்விக்கப்பட்டது