பக்கம்:தீபம் யுகம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 29 2. தீபம் முதல் இதழ் 1965 ஏப்ரல் மாதம், சித்திரை மாதப் பிறப்பன்று (தமிழ் வருடப் பிறப்பின் முதல் நாள் அன்று) 'தீபம்’ பத்திரிகையின் முதலாவது இதழ் பிரசுரமாயிற்று. 'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் எனும் பாரதி வாக்கை தன் குறிக்கோளாக ஏற்று, தீபம் இவ்வரிகளை ஒவ்வொரு இதழிலும் முகப்பில் அச்சிட்டு வந்தது. முதல் இதழில் நா.பா. 'திக்கெட்டும் பரவுக தீபச்சுடர்' என்று விசேஷமான ஒரு தலையங்கம் எழுதியிருந்தார். அதன் முக்கியத்து வம் கருதி அந்த நீண்ட தலையங்கம் முழுமையாக இங்கு தரப்படுகி றது. 'தமிழ்ப் பெருமக்களுக்கு இதோ இன்று ஒரு நல்ல செய்தி. குரோதி நீங்கி இன்று விசுவாவசு வருடம் பிறக்கிறது. இந்தப் புதிய ஆண்டும் நமது தீபமும் சேர்ந்து பிரகாசிக்கத்தொடங்கும் முதல்நாள் இது. நல்ல நாளில் என்னைப் பற்றியும் என் முயற்சியைப் பற்றியும் இதோ உங்களிடம் சில வார்த்தைகள். பரிசுத்தமான எண்ணங்களுடனும் தணியாத சத்திய வேட்கையு டனும் எல்லா இடங்களிலும் அறிவின் பிரகாசமும் உண்மையின் ஒளியும் துலங்க வேண்டுமென்ற உயர்ந்த இலட்சியத்துடனும் இன்று இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நான் ஓர் இலக்கியத் தீபத்தைப் பக்தி சிரத்தையோடு ஏற்றி வைக்கிறேன். இதன் பிரகாசத்தில், பகைமை, போட்டி, பொறாமை, இலக்கிய மாரீசம், நாட்டைக் கெடுக் கும் நச்சு இலக்கியப் புல்லுருவிகள் ஆகிய விதவிதமான இருள்க ளெல்லாம் அகன்று விலகி ஓடுமாக தீபம் நல்லவர்களாகிய எல் லார்க்கும் ஒளியாகவும் தீயவர்களாகிய எல்லார்க்கும் சுடுநெருப்பாக வும் இருக்கும். அப்படித்தான் இருக்கவும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/30&oldid=923223" இலிருந்து மீள்விக்கப்பட்டது