பக்கம்:தீபம் யுகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தீபம் யுகம் கிறது. விசுவாச வருடம் பிறக்கிற இந்தப் புண்ணிய புதுநாளில் திருமகள் துணை நின்று தாங்க, நாமகள் ஏற்றுகிற நமது தீபம் நாலா திசைகளிலும் திசைக் கோணங்களிலும் ஜகஜ்ஜோதியாகப் பிரகாசிக் கிறது. திருமகளும் நாமகளும் துணை நிற்கும் போது நாம் வெற்றி பெறத் தடையேது? * . எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி வேண்டினேனுக் கருளினள் காளி, தடுத்து நிற்பது தெய்வதமேனும் சாகுமானுட மாயினும் அஃதைப் படுத்து மாய்ப்பவள் அருட் பெருங்காளி, பாரில் வெற்றி எனக்குறு மாறே. எண்ணுமெண்ணங்கள் யாவினும் வெற்றி எங்கும் வெற்றி, எதனினும் வெற்றி கண்ணுமாருயிரும் மென நின்றாள் காளித் தாயிங்கெனக் கருள் செய்தாள். மண்ணும் காற்றும் புனலும் அனலும் வானும் வந்து வணங்கி நில்லாவோ? விண்ணுளோர் பணிந்தேவல் செய்யாரோ? வெல்க காளி பதங்களென் பார்க்கே. - என்ற மகிழ்ச்சிக்குரல் முழங்கியபடியே தமிழ்த்தாயின் பாதம லர்களில் குடிஎடுத்துத் தமிழ்ப்பெருமக்களுக்கு இந்த இலக்கிய ஒளி மலரை வரையாத கருத்து வளம் நிரப்பி இன்று முதலாய் வழங்கத் தொடங்குகிறோம்.' ' ' ' . . . . . . . . . . இதழின் உள்ளடக்கம் ரசிகர்களுக்கு மனநிறைவும் மகிழ்ச்சியும் தருவதாக இருந்தது. - -- . . . . . - திரைக்கு ஒரு திரை என்று ஜெயகாந்தன், நாவல் ஒரு கலை என்று ப. கோதண்டராமன், கதாநாயகர்கள் - ஓர் இலக்கியச் சிந் தனை என்று கு. அழகிரிசாமி, இலக்கிய ரசனை பற்றி சித்தம் போக்கு என்று தி. ஜானகிராமன் எழுதிய கட்டுரைகள், கே.சி.எஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/35&oldid=923228" இலிருந்து மீள்விக்கப்பட்டது