பக்கம்:தீபம் யுகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 37 வந்தது. பிறமொழி ஆசிரியர்களைப் பற்றியும், படைப்புகள் குறித் தும் அறிமுகக்கட்டுரைகள் தீபத்தில் இடம்பெற்றன. சுதந்திரத்திற்குப் பின்னர் இந்திய மொழிகளின் இலக்கியங்களின் நிலைமை பற்றி தமிழ் வாசகர்கள் தெரிந்து கொள்ள தீபம் பெரிதும் உதவியது. இலங்கை, மலேசியா எழுத்தாளர்கள், அவர்களது எழுத்துக் கள் பற்றியும் தீபம் ஆர்வமும் அக்கறையும் காட்டியுள்ளது. அவற்றுக் கான சிறப்பிதழ்களை தயாரித்து வெளியிட்டது. நினைவில் நிற்கும் முன்னுரைகள், காலத்தால் சாகாத சிறுகதை கள், ஊஞ்சல் கடிதங்கள் என்று அபூர்வமான விஷயங்களைத் தொகுத்துத் தந்தது. இரத்தினச் சுருக்கம்' என்று சிந்தனை மணிகளை யும், வம்பு மேடை, மறைவாக நமக்குள்ளே என்று சுவையான தகவல்களையும் டில்லி - பம்பாய் - கல்கத்தா மற்றும் மலேசியா செய்திகளைக் கூறும் கடிதங்களையும் தொடர்ந்து பிரசுரித்தது. இலங் கைக் கடிதம் அவ்வப்போது வெளியிடப்பட்டது. நா. பார்த்தசாரதியின் படைப்பாற்றலின் பன்முகத் தன்மை களை 'தீபம்' ஒவ்வொரு இதழும் வெளிப்படுத்தியது. அவரது சிந் தனை வீச்சையும் நகைச்சுவை உணர்வையும், சூடாகவும் சுவையாக வும் கருத்துக்கள் கூறும் திறனையும் இலக்கிய மேடை’ எனும் கேள்வி பதில் பகுதியும் குறிப்புகளும் புலப்படுத்தின. நா. பா. எழுதிய தலையங்கங்கள் தனித்தன்மையோடு, சிந் தனை வேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு ஒளிர்ந்தன. மறுமலர்ச்சி இலக்கியப் படைப்பாளிகளின் முதல் தலைமு றையை சேர்ந்த பி.எஸ். ராமையா, சி.சு. செல்லப்பா, சிட்டி' பெ.கோ. சுந்தரராஜன், க.நா. சுப்ரமண்யம், சோ. சிவபாதசுந்தரம், தி.ஐ.ர. ந. சிதம்பர சுப்ரமண்யன், ஆகியோரின் ஒத்துழைப்பை 'தீபம் பெற்றிருந்தது. அடுத்த தலைமுறையினரான அகிலன், கு. அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன், வல்லிக்கண்ணன், தி.க. சிவசங் கரன்; இவர்களை அடுத்து வந்த ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, கி. ராஜநாராயணன், ராஜம் கிருஷ்ணன், தி. ஜானகிராமன், ஆர். சூடா மணி, ஆ. மாதவன், நீல. பத்மநாபன், தி.சா. ராஜூ, சார்வாகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/38&oldid=923231" இலிருந்து மீள்விக்கப்பட்டது