பக்கம்:தீபம் யுகம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 4.i. பாரதியார், வ.ரா., புதுமைப்பித்தன், கு.ப.ரா., போன்றவர்கள் செழிக்கச் செய்த தமிழ் இலக்கியப் பூஞ்சோலையில் இன்று பல நல்ல் செடிகள் பட்டுப் போய் அங்கங்கே கள்ளியும் காளானும் தெரிகின் றன. சில இடங்களில் அற்புதமான பசுமையும், செழிப்பும் கூட அபூர்வமாகத் தெரிகிறது. அவற்றைத் துணிந்து பாராட்டவும் நம் தமிழர்களுக்குப் பெருமிதமில்லை. பலத்த அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாத ஒரு நல்ல பரிசாவது இதுவரை இங்கு அளிக்கப்பட்டி ருக்கிறதா? அற்புதமாக எழுதும் எந்த தமிழ் எழுத்தாளனின் நூல்க ளாவது இங்கு இலட்சக்கணக்கில் விற்று அவன் வாழ்வை உயர்த்தியி ருக்கிறதா? எந்த நல்ல பத்திரிகையையாவது உடனே துணிந்து ஆதரித்து வளர வாழத் தமிழ் மக்கள் இதுவரை வழி செய்திருக்கிறார்களா? எட்டாந்தரமாகக் கீழே இறங்கிப் போயிருந்தாலும் அந்தப் பழைய இரண்டு மூன்று பத்திரிகைகளையே வாங்குவது தவிரப் புதிய நல்ல வைகள் வளர மனப்பூர்வமாக உதவியிருக்கிறார்களா? இதற்கெல்லாம் இல்லை இல்லை' என்பதை விட வேறு பதில் கூற வழி கிடையாது. காரணமென்ன? இங்கு நல்லதைப் புகழவும் துணிவு இல்லை. தீயதை வெறுக்கவும் துணிவு இல்லை. மொத்தத்தில் அடிப்படையான இலக்கிய ஒருமைப்பாடு எதுவும் இல்லை. பரவ லான அரசியல் பின்னணிகளே இலக்கியத்திலும் பிரிவுகள் பிளவு களை உண்டாக்குகின்றன. இந்த நிலைதான் நீடிக்க வேண்டுமா?என்பதை மறு பரிசீலனை செய்யவேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் நாம். (தலையங்கம். ஜூன் 1966) அன்றைக்கு இன்று நிலைமை தீவிர மாற்றங்களைப் பெற்று விடவில்லை என்பதை நேர்மையான நோக்கர்கள் அறிவார்கள். இதற்கு தமிழ் மக்களின் இயல்புகளும் மனப்போக்குகளும் செயல்பா டுகளுமே முக்கிய காரணமாகும். இத்தகைய இலக்கியச் சூழ்நிலை குறித்தும் சிந்தித்து, நா. பா. தன் எண்ணங்களை ஒரு தலையங்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அது மீண்டும் கருத்தில் கொள்ளத் தக்கதாகும். 'தமிழகத்தில் பொதுமக்கள் அளவில் மறுமலர்ச்சி இலக்கியச் சூழ்நிலை எதுவும் ஆழமாக இன்னும் உருவாகவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/42&oldid=923236" இலிருந்து மீள்விக்கப்பட்டது