பக்கம்:தீபம் யுகம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தீபம் யுகம் தமிழர்களுக்குப் பொதுவாகவே ஒரு பாமர வியப்புக் குணம் உண்டு. திடீர்ப் பணக்காரனைப் பற்றியும் நீளப் பேசுவார்கள். திடீ ரென்று திவாலாகிறவனைப் பற்றியும் நீளப் பேசுவார்கள். விலை வாசி, அரசியல், சினிமா இவை பற்றிப் பேச வேண்டாமென்று சொல்லவில்லை. இவைகளைப் பற்றி மட்டுமே பேசவேண்டாமென் பது தான் நம் வாதம். இலக்கியத் துறையில் விளையும் நல்ல மாறுத லையும் பொதுமக்கள் கவனிப்பதில்லை. தீய மாறுதலையும் பொது மக்கள் கவனிப்பதில்லை. விமர்சனம், இலக்கியத்திறனாய்வு, இலக் கிய விவாதங்கள் போன்ற புதிய துறைகளில் பாடுபடும் மறுமலர்ச்சித் தமிழ்ப்புத்தகங்கள். இதழ்களைப் பற்றிப் பொது மக்கள் பலருக்குத் தெரியவில்லை. ஏழாந்தர, எட்டாந்தரப் புத்தகங்கள், பத்திரிகைக ளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கிறது. அல்லது எல்லாப் பத்திரிகைகள் புத்தகங்களைப் பற்றியும் ஒன்றும் தெரிவதில்லை. இந்த நிலையில் துடிப்பும் துணிவும் மிக்க தமிழ் மறுமலர்ச்சி இலக்கிய ஏடுகளும், அந்த ஏடுகளையே ஒரு இலக்கிய இயக்கமாக வும் நடத்துகிறவர்களும் என்ன செய்வது, யாரை நம்புவது? யாரு டன் தொடர்பு கொள்வது என்பதை நினைக்கும் போதில் நினைவே வறண்டு போகிறது. தமிழகம் முழுவதும் உள்ள தரமான எழுத்தாளர் களும் இலக்கிய அன்பர்களும், நல்ல பத்திரிகைகளை நாடிப்படிப்ப வர்களும் ஓர் இலக்கியச் சூழ்நிலையை உருவாக்க முயலவேண்டும். ஊர்தோறும், கிராமந்தோறும், படிப்படியாக இந்த இலக்கியச் சூழ் நிலை உருவாக்கப்படா விட்டால், உயர்தர இலக்கியம் - இலட்சிய இலக்கியம் - இருள் சூழ்ந்து குன்றிப் போகுமோ என்று பயமாயிருக் கிறது. நமது நூல் நிலையங்களைத் தரமான பத்திரிகைகள் அலங்கரிப் பதில்லை. நமது மக்களில் பெரும்பாலோர் கைகளில் வாழைப்பழத் தோலில் சறுக்கி விழுந்த ஹாஸ்யப் பத்திரிகைகளே அலங்கரிக்கின் றன. நமது இளைஞர்கள் - யுவதிகள் கைகளைச் சினிமா ஏடுகளே நிறைக்கின்றன. இந்த நிலைமையைப் பற்றித் தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ் இலக்கிய ஆசிரியர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் யாருமே கவலைப் லெகாகக் கெரி வில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/43&oldid=923237" இலிருந்து மீள்விக்கப்பட்டது