பக்கம்:தீபம் யுகம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 47 பா. ஊன்றி உணர்தற்குரிய உண்மைகளை அவற்றில் எடுத்துரைத் தார். 'நமது சுதந்திரம் பற்றி ஒரு தலையங்கம் 'பாரத நாடு சுதந்திரம் அடைந்த இந்தப் பல ஆண்டுகளில் சில துறைகளில் நாம் வளர்ந்திருக்கிறோம். சில துறைகளில் தளர்ந்துமி ருக்கிறோம். நமது வளர்ச்சி பெருகவும், தளர்ச்சி குறையவும் தேச பக்தியோடும் பொறுப்புணர்ச்சியோடும் மேலும் மேலும் பாடுபட வேண்டும். விடுதலை, சுதந்திரம் என்ற பதங்களில் அர்த்தத்தை முதலில் நாம் மக்களுக்குச் சரியான முறையில் உணர்த்த வேண்டும். sold otbāšāošščCŞāg 68 (956060 (Freedom From Slavery) Gaucit டினோம் - கிடைத்தது. சுதந்திரம் அடைந்த நாட்டில் ஒவ்வொருவ ரும் பொறுப்பிலிருந்தோ, கடமையிலிருந்தோ விடுதலை (Freedom From Responsibility வேண்டுவது இன்று வழக்கமாகி வருகிறது. அடிமைத் தனத்திலிருந்து தான் சுதந்திரம் அடையலாமே ஒழியப் பொறுப்பிலிருந்தும் கடமையிலிருந்தும் சுதந்திரமடைய முயலக்கூ டாது. பாரதபூமியின் ஒவ்வோர் குடிமகனும் சுதந்திர நன்னாளில் நினைவுகூர வேண்டிய உண்மை இது. - (தீபம் - ஆகஸ்டு 1969) பாரதி பற்றிய ஒரு தலையங்கம் உரிய முறையில் பாரதிக்குப் புகழாரம் சூட்டியுள்ளது. 'காலமும் பழமையாக்க முடியாத மகாகவி பாரதியை எத் துணை முறை நினைத்தாலும் நமக்குப் பெருமையாயிருக்கிறது. அகில இந்தியாவுக்கும் மிகப் பெரிய தேசிய மகாகவி பாரதி ஒரு வனே. தாகூர் கங்கையை மட்டுமே பாடியிருக்கிறார். பாரதியோ கங்கையையும் காவிரியையும் இணைக்கும் சிந்தனையை அன்றே பாடி வைத்திருக்கிறான். நேற்றும், இன்றும், நாளையும் பாரதியினளவு பரந்த தேசிய மனப்பான்மை உள்ள வேறு ஒரு பிஞனை இந்த நாட்டில் பார்க்க முடியவில்லை. இந்தியர்கள் இதோ ஒரு மகாகவி' என்று பெருமை யோடு தலை நிமிர்ந்து சொல்லிக்கொள்வதற்குப் பாரதி,ஒருவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/48&oldid=923242" இலிருந்து மீள்விக்கப்பட்டது