பக்கம்:தீபம் யுகம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தீபம் யுகம் தமிழ் நாட்டிலோ, சுதந்திர இந்தியாவில் ஒர் அங்கமாக இருந் தும், இந்தக் குறிப்பிட்ட கோணத்தில் ஒருவித அடிமை மனப் பான்மைதான் இன்னும் நிலவி வருகிறது. காலத்தைப் பிரதிபலிக்கும் கதைகள் தமிழில் நிறைய வரவேண்டும். நிர்ப்பயமான, சமூகப்ரக் ஞையுள்ள, கலைப் படைப்பாளிகள் தான் இதைச் செய்ய முடியும். அத்தகைய படைப்பாளிகள் தமிழ்மொழியில் விரல் விட்டு எண்ணத் தக்கவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்கள் தொகை பெருகவும், அவர்கள் படைக்கும் காலத்தையும் சூழ்நிலையையும் பிரதிபலிக்கும் சமூகப்ரக்ஞையுள்ள இலக்கியங்கள் பெருகவும் ஏற்ற கனிவு இங்கே வரவேண்டும் என்று தீபம் ஆசைப்படுகிறது. நினைவூட்டுகிறது." (ஜூன் 1973) எழுத்தாளர்களுக்கு சமூகப்பிரக்ஞையோடு பரந்த நாட்டுப்பற் றும் விசால இந்திய உணர்வும் அவசியம் தேவை என்பதை ஒரு தலையங்கம் வலியுறுத்தியது. "இந்தியாவில் இருக்கிறோம் - இந்தியர்களாக இருக்கிறோம் - இந்திய இலக்கியத்தின் அங்கமாக இயங்குகிறோம் என்றெண்ணு வதே நம் நாட்டுப்படைப்பிலக்கிய கர்த்தாக்கள் நாட்டுக்குச் செய்யும் ஒருமைப்பாட்டுப் பணி, முற்போக்கான மனப்பான்மையும், யதார்த்த இலக்கியப் படைப்பாற்றலும் மிக்க எல்லா இந்திய மொழி யினரும் எல்லாப் பகுதிகளிலும் புகழ் பெற வேண்டியது அவசியம். தமிழின் பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்துவோம். மற்றவர் கள் பெருமையை நாம் உணர்வோம். நமது மாநிலம் தமிழகம் என்றாலும் நமது நாடு இந்தியா என்ற உணர்வே நம்முள் அதிகம் வளர வேண்டியது. தமிழர், தெலுங்கர், கேரளர், கன்னடர் முதலிய அனைவருமே அடங்கிய ஒரு பதம் இந்தியா. இந்தியா என்ற உணர்வு பெரியது. பரந்தது. அதைக்காத்து வளர்க்க வேண்டும். நாட்டுக்குப் பல சோதனைகள் நிறைந்த இந்தக் காலத்தில் இது மிகவும் முக்கியம் என்பது நம் கருத்து.' (ஜூன் 1974) மே தினச் சிந்தனையாக 1975 ல் நா.பா எழுதிய தலையங்கம் என்றும் எழுத்தாளர்களால் நினைவில் நிறுத்தப்பட வேண்டிய நற்க ருத்துக்களை கொண்டுள்ளது. விலகி நிற்பதில் பயனில்லை என்பது அதன் தலைப்பு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/53&oldid=923248" இலிருந்து மீள்விக்கப்பட்டது