பக்கம்:தீபம் யுகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 53 "இந்திய இலக்கியப் படைப்பாளிகளின் அணியில் கேரள, வங்க எழுத்தாளர்களைத் தனியே பிரிப்பது வாழ்க்கையிலிருந்து வெகுதூரம் விலகி நிற்காத அவர்களின் தன்மையே ஆகும். நாட்டின் பொதுவாழ்வில் லஞ்சம், ஊழல், பதவிப்பித்து, அதி கார துஷ்பிரயோகம், உழைப்பில் சோர்வு ஆகியவற்றைத் தட்டிக் கேட்கத் துணியும் இலக்கிய ஆண்மையும் தேவைப்படுகிற காலம் இது, தமிழ்நாட்டுச் சூழ்நிலையோ முற்றிலும் வேறானாது. எதிலும் விலகி நின்று பாதுகாப்பான எல்லைக்குத் தங்களை உயர்த்திக் கொண்டு கற்பனை செய்வதே வழக்கம் என்று ஆகி இருக்கிறது இங்கே. நம்முடைய சமகாலத்திலும், பொதுவாழ்விலும் தொடர்பு படுத் திக் கொள்ளாத எழுத்தால் மக்களுக்கு என்ன பயன்? ஆகவே இலக்கியப் படைப்பாளிகளுக்கும் ஒரு involvement வேண்டும். தந் தக் கோபுர மனப்பான்மையின் காலம் முடிந்து விட்டது. சமகாலப்பி ரக்ஞையும், சமகாலப் பிரச்னைகளும், சமகால உணர்வுகளும் இல் லாத வெற்றுக் கற்பனை எழுத்தை வண்டி வண்டியாக வளர்ப்பதில் ஒரு பயனுமில்லை. isolation இனிமேல் பயன் தராது என்பதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். உழைப்பையும் தன்னம்பிக்கையையும் நினைவூட்டும் நாளாகிய இந்த மேதின மாதத் தில், விலகி நிற்காமல் இணைந்து ஈடுபட்டு இலக்கியம் படைக்கும் பணிக்கு உறுதி எடுத்துக் கொள்வோமாக. இந்த உறுதி தமிழ் இலக் கிய உலகுக்கு ஒரு புதிய பாதையையும் பார்வையையும் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. (மே 1975) - எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு கட்டாயம் தேவை என்று அழுத்திக் கூறியது ஒரு தலையங்கம், "வாழ்க்கையில் பலருக்கு அதிருப்தியும் கசப்புணர்ச்சியும் பேராசையும் ஏற்படுவது சகஜநிலையாகிவிட்டது. பொதுவாழ்வில் லஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன. இப்படிச் சமூகம் எங்கும் தோன்றி விட்ட நோய்களைத் தீர்க்க எழுத்தாளர்களும் கவிஞர்களும் இலக்கிய ஆசிரியர்களும் மற்றவர்களை விட மிகவும் அவசரமாக வும் அதிகமாகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/54&oldid=923249" இலிருந்து மீள்விக்கப்பட்டது