பக்கம்:தீபம் யுகம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 தீபம் யுகம் பேதங்களை நீக்கி ஒற்றுமையை வளர்க்கவும், பேராசையை நீக்கித் திருப்தியைக் கற்றுக் கொடுக்கவும் ஏற்ற நல்லுணர்வுகளைச் சக்தி வாய்ந்த எழுத்தின் மூலம் உண்டாக்கி நாம் பாடுபடவேண்டும். பொழுதுபோக்கு இலக்கியம் படைக்கவும், கொச்சையான பாலு ணர்வு வக்கரிப்புகளை வரைந்து காட்டவும், ஏதாவது அசிங்கங் களை அரை குறையான கலைத் திறமையுடனே எழுதிக் காட்டவும் இது தருணமில்லை. தேசம் ஆபத்திலிருக்கிறது. மக்கள் அபாய நிலையிலிருக்கிறார்கள். துயரப்படுவோர் தொகை எங்கும் அதிக அளவில் பெருகிவிட்டது. வாழ்க்கை சாதாரண உத்தரவாதமும் அற்ற தாகி நலிந்து விட்டது. பரிதவிப்பவர்களுக்கு நடுவே போய்ப் பாண்டு வாத்தியம் முழங்குவது போல் தாறுமாறாக எதையாவது செய்வதால் பயனில்லை. இந்திய சமூகத்தில் நம்பிக்கையை, உழைக்கும் திறனை, பரஸ்ப ரம் பரிந்துணர்வை, மொழி வெறி இனவெறியற்ற நட்புறவை, சத்திய வேட்கையை வளர்க்கும் இனிய நல்லுறவுகளைப் பெருக்கத் தமிழ் எழுத்தாளர்கள் முனைந்து பாடுபட வேண்டும்." (நாட்டின் நிலை யும் எழுத்தாளர் கடமையும் - பிப்ரவரி 1974) நாட்டில் பெருகிவரும் அபாயகரமான போக்கு பற்றி எச்ச ரித்து, எழுத்தாளர்களின் கடமையை உணர்த்திய ஒரு தலையங்கமும் கவனிப்புக்கு உரியதாகும். 'அண்மைக் காலமாக நாட்டில் வன்முறைகள், ஆட்களைக் கடத்திச் சென்று பணயத் தொகை கேட்டல், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் மிகுதியாகி வருகின்றன. இதற்குக் காரணம் அல்லது துண்டுதல் என்ன? - மேலை நாட்டுக் குற்ற இலக்கியங்களை (க்ரைம் லிட்டரேச்சர்) படித்த விறுவிறுப்பில் - மன வளர்ச்சியோ விஞ்ஞான வளர்ச்சியோ அந்த அளவு ஏற்படாத, வேலையில்லாதோர் அதிகமுள்ள நம் நாட் டில் எழுதப்படுகிற அதே பாணிக்கதைகள் - அதே பாணியில் எடுக் கப்படும் அரை வேக்காட்டுத் திரைப்படங்கள் இவையே பெருமளவு காரணம் என்பது என் கருத்து. பாங்க் கொள்ளையைப் பற்றிய ஒரு நாவல் அல்லது படத்தைப் படிக்கிற - பார்க்கிற வேலை கிடைக்காத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/55&oldid=923250" இலிருந்து மீள்விக்கப்பட்டது