பக்கம்:தீபம் யுகம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 57. ஆரம்பகாலம் முதல் இறுதி இதழ் வரை தீபத்துக்கு சிறப்பும் தரமும் சேர்த்திருக்கின்றன. - ஆசிரியர் நா. பார்த்தசாரதியே பன்முக ஆற்றல் பெற்ற படைப் பாளியாக இருந்ததனால், மிகுந்த கவனிப்பும் பாராட்டும் பெறும் விதத்தில் நாவல்கள், குறுநாவல்கள், கவிதைகள், சிந்தனைக் கட்டு ரைகள் முதலியன படைத்து நல்ல முறையில் இலக்கியப் பணியாற்று வதும் சாத்தியமாயிற்று. நாவல்கள் 'தீபம் இதழைத் தொடங்குவதற்கு முன்னரே நா. பா நல்ல நாவலாசிரியர் என்றும், சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்றும் வாசகர் களின் உள்ளத்தில் இடம் பெற்றிருந்தார். குறிஞ்சிமலர், பொன் விலங்கு ஆகிய சமூகநாவல்களும், பாண்டிமாதேவி, மணிபல்லவம் எனும் சரித்திர நாவல்களும் அவருக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்திருந்தன. அவருடைய நாவல் படைக்கும் திறமைக்கும் தீபம்' நல்ல களம் அமைத்துக் கொடுத்தது. நா. பா என்ற பெயரிலும், மணிவண்ணன் என்ற புனை பெயரிலும் அவருடைய நாவல்கள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரம் பெற்றுக் கொண்டிருந்தன. நெற்றிக் கண் என்ற சமூக நாவல் தீபம் இரண்டாவது இதழிலி ருந்து தொடர்ந்தது. அது வளர்ந்து வந்த போதே. வாசகர்களின் அன்பான ஆதரவை ஈர்ப்பதற்காக கபாடபுரம்' என்ற சரித்திர நாவலை நா. பா எட்டாவது இதழ் முதல் எழுதலானார். இரண்டும் நெடுங்காலமும் தொடர்ந்து வெளி வந்தன. தற்கால நடைமுறையை அனுசரித்து, காலத்தை பிரதிபலிக்கும் கதைகள் எழுதப்பட வேண்டும்; சமூகத்தில் அரசியலிலும் பல்வேறு துறைகளிலும் காணப்படுகிற கோளாறுகளையும் குறைபாடுகளை யும், சிதைவுகளையும் சீரழிவுகளையும் எடுத்துச்சொல்கிற - உயரிய நோக்கங்களையும் கொள்கைகளையும் வலியுறுத்துகிற-கதைகள் பல வடிவங்களிலும் எழுதப்பட வேண்டும் என்ற கருத்தை நா. பா கொண்டிருந்தார். நிர்ப்பயமான, சமூகப்ரக்ஞையுள்ள, படைப்பாளி கள் தான் இதைச் செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரே அந்தப் பண்புகளைப் பெற்றிருந்ததனால், துணிச்சலோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/58&oldid=923253" இலிருந்து மீள்விக்கப்பட்டது