பக்கம்:தீபம் யுகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 59 றுர் இராமகிருஷ்ணன் எழுதிய ஐந்து சென்ட் நிலம்', 'சல்லிவேர்கள் (தமிழாக்கம்: குறிஞ்சி வேலன்) ஆகியவற்றையும் 'தீபம் வெளியிட் டிருக்கிறது. குறுநாவல் குறுநாவல் எனும் இலக்கியப் பிரிவுக்கும் தீபம் ஆற்றியுள்ள பணி போற்றப்பட வேண்டியது ஆகும். முதல் இதழிலிருந்து இறுதிக் காலம் வரை, இதழ் தோறும் ஒரு நல்ல குறுநாவல் தீபத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழின் சிறந்த படைப்பாளிகளின் அருமையான குறு நாவல்களையும், இதர இந்திய மொழிகளின் நல்ல படைப்புகளையும் தீபம் தந்திருக்கிறது. தீபம் முதலாவது இதழிலேயே நா. பா., மணிவண்ணன் என்ற பெயரில் 'பிர்யாணம் எனும் குறுநாவலை எழுதினார். பின்னர், அவ்வப்போது, பொன்முடி என்ற பெயரில் அற்புதமான குறுநாவல் கள் பலவற்றை அவர் எழுதியுள்ளார். கங்கை இன்னும் வற்றிவிட வில்லை, நாற்பது கோடி ஏழைகள், டிப்ளமேட், தேவதைகளும் சொற்களும் குறிப்பிடத்தகுந்தவையாகும். நா. பா. என்ற பெயரி லேயே ஊற்றுக்கண் என்பதை எழுதியிருக்கிறார். லா.ச.ராமமிர்தம் எழுதிய த்வனி', 'இன்னும் சில நாட்கள், விழா, வல்லிக்கண்ண னின் விளையாட்டுப் பெண், மன்னிக்கத் தெரியாதவர். ஹீரோ, நீ. பத்மநாபனின் மின் உலகம், யாத்திரை, ஆதவனின், சிறகுகள்', இரவுக்கு முன் வருவது மாலை ஆகியவை விசேஷமானவை. ராஜம் கிருஷ்ணன், ஆர். சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி, கு. அழகிரிசாமி, மகரிஷி, சார்வாகன், தி.சா. ராஜூ, எஸ். லட்சுமி சுப்பிரமணியன், பீஷ்மன், தாமரை மணாளன் முதலியோரது குறுநா வல்களும் வந்துள்ளன. எம்.டி. வாசுதேவன் நாயரின் 'இருளில் ஓர் இதயம், உஷா பிரியம்வதா இந்தியில் எழுதியவை, சுவ்ருத சக்கரவர்த்தி, (வங்கம்), பூரீமதி விவானி, மன்னு பண்டாரி என்று பலரால் பல்வேறு மொழிக ளிலும் எழுதப்பட்ட குறுநாவல்கள் தமிழாக்கம் செய்யப்பெற்று மிகு தியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பல சமயங்களில் மூலக் கதை எந்த மொழியை சேர்ந்தது என்று குறிக்கப்படவில்லை. இது ஒரு குறையேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/60&oldid=923256" இலிருந்து மீள்விக்கப்பட்டது