பக்கம்:தீபம் யுகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தீபம் யுகம் சிறுகதை தமிழில் சிறுகதை செழிப்பாக வளர்ந்துள்ள ஒரு துறை ஆகும். அதன் பல்வேறு வண்ணங்களும் வனப்புகளும் புலனாகக் கூடிய விதத்தில், தீபமும் முதலாவது இதழிலிருந்தே சிறப்பான சிறுகதை களை வெளியிட்டு ஒளி வீசியது. தீபம் அதன் இருபத்து மூன்று வருட காலத்தில் எண்ணற்ற சிறுகதைகளை பிரசுரித்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் மூன்று கதைக ளுக்குக் குறையாமல் அது வெளியிட்டு வந்தது. சில சமயம் நாலைந்து கதைகள் கூட இடம் பெற்றதும் உண்டு. சிறுகதைக் கலையில் சாதனைகளும் சோதனைகளும் புரிந்த விற்பன்னர்கள் முதல் புதிய இளைய எழுத்தாளர்கள் வரை, வெவ் வேறு தர எழுத்தாளர்களும் தங்கள் திறமையையும் ஆர்வத்தையும் ஈடுபடுத்தி விதம் விதமான கதைகளை எழுதியுள்ளனர். எத்தனை வகையான படைப்பு முயற்சிகள் எத்தனை விதமான பார்வைகள் எத்தகைய மனோ பாவங்கள்! 'தீபம் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப் பெற்று. பல தொகுதிகளாக வெளியிடப்பட்டால், தமிழ் சிறுகதைத்துறையின் செழுமையும், அதை அவ்வாறு செழிக்கச் செய்த படைப்பாளிகளின் திறமையும் நன்கு தெரிய வரும். நா. பா. இருந்த காலத்திலேயே அப்படி ஒரு முயற்சி மேற் கொள்ளப்பட்டது. கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி அவர்களின் ஒத்துழைப்புடன் ஒரு தொகுதியும் வெளியிடப்பட்டது. அதுவே 'தீபம் சாதனையின் ஒரு சிறு அளவு கோலாக அமைந்து விளங்கி யது. அதைப் போல் மேலும் பல தொகுதிகள் தயாரிப்பதற்குத் தகுந்த சிறுகதைகளை தீபம் இதழ்கள் தம்முள் கொண்டுள்ளன. தீபம்' இதழ் தொகுப்புகள் மதிப்பு மிக்க கலைக்களஞ்சியம் ஆகும். அவை சிறுகதைகளின் சுரங்கமும் கூட கவிதைகள் 'தீபம் ஆரம்பத்தில் சிறிது காலம் மரபுக் கவிதையை மட்டுமே ஆதரித்து வந்தது. தமிழ்ப் புலமையும் பயிற்சியும் பெற்றிருந்த நா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/61&oldid=923257" இலிருந்து மீள்விக்கப்பட்டது