பக்கம்:தீபம் யுகம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§2 தீபம் யுகம் அதை ஒரு புதிய அழைப்பு என்ற தலைப்பில் தீபம் வெளியிட் ، يُقتجسأ கவிதை இது தான் - வயல்களுக்குச் செல்லுங்கள் அல்லது ஆலைகளுக்கு. ஊர்வலங்களால், கோஷங்களால், ஆர்ப்பாட்டங்களால், பிரச்சாரங்களால் மட்டும் எந்த நாடும் உருப்பட்டதில்லை மேடைகளைத் தகர்த்தெறியுங்கள் வயல்களுக்கோ ஆலைகளுக்கோ செல்லுங்கள். உடல் மூட ஆடைகள் வயிற்றுக்குச் சோறுமேடைகள் நெய்வதில்லை கோல்டிங்கள் விளைப்பதில்லை. நாட்டு கெளரவம் நடுத்தெருவில்! இதுவே தருணம் பணிபுரிய, விரைந்து வா தோழனே பணிபுரிய, வாய் கிழியப் பேசுவதால் புதைந்த வரலாற்றைத் தோண்டுவதால் மட்டும் எந்த நாடும் உருப்பட்டதில்லை மேடைகளைத் தகர்த்தெறியுங்கள்! வயல்களுக்கோ ஆலைகளுக்கோ செல்லுங்கள். - - இந்த நாட்டின் மானம் காக்க வியர்வைப் பெருக்கே இன்றையத் தேவை. தியாகம் என்றொரு தோட்டம் அமைத்தால் மலரும் பூவின் மணமும் இணைந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/63&oldid=923259" இலிருந்து மீள்விக்கப்பட்டது