பக்கம்:தீபம் யுகம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 67 வடமொழியும் (கே. எஸ். பூரீநிவாசன்) பாரிஸ் - சில சுவையான நிகழ்ச்சிகள் (தமிழ்த் தொண்டன்) சோவியத் நாட்டில் பெண்கள் (ராஜம் கிருஷ்ணன்) - இவ்விதம் தீபம் கட்டுரைகள் பரந்த அளவில் பார்வை செலுத்தியுள்ளன. இவ்வகையில் இன்னும் பல கட்டுரைகள் E_{SITETÉST. மேலும், தொழில் துறை, விவசாயம் போன்ற நாட்டின் வளங் கள் குறித்தும் ஆழ்ந்த சிந்தனைப் பாங்கான கட்டுரைகளை தீபம் பிரசுரித்திருக்கிறது. பிரபல தொழில் அதிபர்களும் விற்பன்னர்களும் அவற்றை எழுதியிருக்கிறார்கள். தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் பல கட்டுரைகள் வழங்கியுள்ளார். பொருளாதாரச் சிக்கல் தீரக் காந்திய வழி, சென்னை மாநிலத்தில் சர்க்கரைத் தொழில், காந்தியும் சகாக்களும் ஆகியவை முக்கியமானவை சுதந்திரத்துக்குப் பின் தொழில் வளர்ச்சி, விவசாயத்தில் தொழில் வளர்ச்சி, கரும்பொன் (இரும்பு) ஆகியவை ஜி.ஆர். தாமோதரன் எழுதிய கட்டுரைகள். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பொது நலத் தொடர்பு அதிகாரி, பி.வி. ரெங்கநாத், பொருளாதார வளர்ச்சியில் எண்ணை யின் பங்கு பற்றி எழுதியுள்ளார். ஆங்கிலத்தில், அல்லது பிற மொழியில், வந்த முக்கியமான சில கட்டுரைகள் மொழி பெயர்க்கப்பட்டு தீபத்தில் வெளிவந்துள்ளன. ஏ.எஸ் ராமன் எழுதிய 'தென்னிந்திய நாகரிகப் பிரபை (தமி ழில் ப. சுந்தரேசன்), கே. ஆர். பூரீனிவாச ஐயங்கார் எழுதிய சுதந்திர பாரதத்தில் இலக்கியப் போக்கு (தம்பி சீனிவாசன்), சாமானிய மனிதனின் பிரச்னை - கமலேஷ்வர் (செளரி), திருமதி தாரா பிரசாத் எழுதிய இனவெறுப்பைத் தூண்டும் திரைப்படங்கள் (டி. எஸ் பார்த்தசாரதி), எம். வி. காமத்தின் நாம் எந்தப் பாதையில் போகி றோம்? போன்றவை குறிப்பிடத்தக்கனவாகும். இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டுக கருத்தரங்கின் தமிழ்ப் பகுதியில் படிக்கப்பெற்ற பல்வேறு சிறந்த கட்டுரைகளின் சுருக்கங் களை தீபம் தொடர்ந்து வெளியிட்டு இலக்கியப் பணி புரிந்தது முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வற்றுடன், தீபம் பல முக்கியமான பயன் மிகுந்த கட்டுரைத் தொடர்களையும் வெளியிட்டு அரும் பணி ஆற்றியிருக்கி திது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/68&oldid=923264" இலிருந்து மீள்விக்கப்பட்டது