பக்கம்:தீபம் யுகம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தீபம் யுகம் 7. கட்டுரைத் தொடர்கள் பொதுவாக பத்திரிகைகள் - இலக்கிய இதழ்கள் கூட சுவாரசி யமான நாவல்களைத் தான் தொடராக வெளியிடுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். கட்டுரைத் தொடர்கள் வறண்டதாய், வாசகர் களை வசீகரிக்கக்கூடிய தன்மை அற்றதாக, இருக்கும் என்பதே பெரும்பாலான பத்திரிகை ஆசிரியர்களின் எண்ணம். ஆனால் தீபம் இவ்வகையில் இதர பத்திரிகைகளிலிருந்து முற்றி லும் மாறுபட்ட போக்கையே கையாண்டு வந்தது. கனத்த, சிந்த னைக்கு இடம் தரக்கூடிய, ஆழ்ந்த விஷயங்கள் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளை தொடர்களாக பிரசுரிப்பதில் மகிழ்ச்சி கண்டது. ஆரம் பம் முதலே இதை ஒரு கொள்கையாகக் கொண்டிருந்தார் நா. பா. 'தீபம் முதல் இதழிலேயே கதாநாயகர்கள் - ஓர் இலக்கியச் சிந்தனை என்கிற ஆழ்ந்த ஆய்வு ரீதியான கட்டுரைத் தொடரை கு. அழகிரிசாமி எழுத ஆரம்பித்திருந்தார். அது தொடர்ந்து பல மாதங் கள் வளர்ந்தது. அதே சமயத்திலேயே ஜெயகாந்தன் திரைக்கு ஒரு திரை' என்ற தொடரை எழுதி வந்தார். திரைப்பட உலக அனுபவங்கள், படக் கலை சம்பந்தப்பட்ட சிந்தனைகள் பற்றி அவர் எழுதினார். அகிலன் கதைக்கலை பற்றிய தனது கருத்துக்களை தொடர் கட்டுரையாகப் பதிவு செய்தார். சரத் சந்திரர் வாழ்க்கை பற்றி இளம் பாரதி எழுதிய கட்டுரைத் தொடரை தீபம் பிரசுரித்தது. அடுத்து, மணிக்கொடிக் காலம் என்ற தலைப்பில் மணிக் கொடி இலக்கிய இதழின் வரலாற்றை, அந்தப் பத்திரிகையின் ஆசிரி யராக இருந்து, தமிழ் சிறுகதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்படுவதற் காகப் பெரிதும் பணியாற்றிய பி. எஸ். ராமையா எழுதினார் பய னுள்ள இக்கட்டுரைத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிட்டியது. இத்தொடர் முற்றுப் பெற்றதும், வ. விஜயபாஸ்கரன் நடத்திய முற்போக்கு இலக்கிய இதழான சரஸ்வதி'யின் வரலாற்றை வல்லிக் கண்ணன் தொடர்ந்து எழுதினார். இடைக்காலத்தில், விடுதலைக்குப் பின் தமிழ் நாவல்கள் என்று எழில்முதல்வன் எழுதிய தொடர் வெளிவந்தது. அகிலன் தனது வாழ்க்கை அனுபவங்களை எழுத்தும் வாழ்க் கையும் என்று தொடர்ந்து எழுதியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/69&oldid=923265" இலிருந்து மீள்விக்கப்பட்டது