பக்கம்:தீபம் யுகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 69 சரஸ்வதிகாலம் தொடரை அடுத்து வ. க. புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து விரிவாக எழுதிய தொடர் இடம் பெற்றது. சி.சு.செல்லப்பா, எழுத்து பத்திரிகையின் வளர்ச்சி குறித்து "எழுத்து அனுபவங்கள் தொடரை வழங்கினார். 'தீபம் தொடர்கதைகளை விட எழுத்து அனுபவங்கள், புதுக்க விதையின் தோற்றமும் வளர்ச்சியும், எழுத்தும் வாழ்க்கையும் போன்ற கட்டுரைத் தொடர்களை அதிகமாக வெளியிடுகிறோம். இலக்கியமாதப் பத்திரிகைகளில் தீபம் இப்பணியைச் சிரத்தையோடு செய்ய விருப்புகிறது. மாதப் பத்திரிகைகளில் தொடர்கதைகளை விட இப்படித் தொடர் அம்சங்கள் இலக்கிய வரலாற்றுக்கு நிலை யான பயனை நல்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தீபம் முன்பு வெளியிட்ட மணிக்கொடிக்காலம், சரஸ்வதி காலம் போன்ற தொடர்களுக்கு இப்படி ஒரு மதிப்புக்கிட்டியிருப்பதையும் நாங்கள் உணர்கிறோம். தமிழ் இலக்கியத்தின், வளமான, பலமான, காலகட் டங்களை ஒவ்வொரு தலைமுறை வாசகர்களுக்கும் அறிமுகப்படுத் துகிற இந்த முயற்சியை இலக்கிய ரசிகர்கள் இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று (மீண்டும்) தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம் என்று நா.பா விசேஷக்குறிப்பு ஒன்றை 'இலக்கிய விருந்து என்று எழுதியுள்ளார் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் கட்டுரைத் தொடர் நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவந்து இலக்கியவாதிகளின் நன்மதிப்பையும் பாராட்டுதல்களையும் அதிகம் பெற்றது. அதனால் வ. க. தொடர்ந்து 'பாரதிக்குப் பின் தமிழ் உரை நடை, தமிழில் சிறு பத்திரிகைகள் ஆகிய தொடர்களை எழுத நேர்ந்தது. ஒவ்வொன்றும் தீபத்தில் நான்கு வருடங்கள், நாலரை வருடங்கள் என்று நீடித்தது. ஆயினும் அலுப்பு ஏற்படுத்தாத தொடர்களாகவே இருந்தன. கு. ராஜவேலு சித்திரச் சிலம்பு' என்று சிலப்பதிகாரக் கட்டுரை களை ஒப்பியல் அடிப்படையில் ரசமாக எழுதினார். சிலப்பதிகார நயங்களை எடுத்துச் சொல்வதோடு ஆங்கிலக் கவிதைகள் மற்றும் காவியங்களின் சிறப்புகளையும் அவர் விளக்கமாக இத்தொடரில் எழுதியுள்ளார். 'சம்பந்தமில்லாத விஷயங்கள் பற்றி ஜெயகாந்தன் தொடர்ந்து எழுத முனைந்தார். ஆனால் மூன்று இதழ்களுக்கு மேல் அது தொடர வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/70&oldid=923267" இலிருந்து மீள்விக்கப்பட்டது