பக்கம்:தீபம் யுகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வி பதில் கேள்வி தீபம் யுகம் பார்ப்பது, சுயநலத்தைத் தவிர்ப்பது ஆகிய நற்குணங்கள் புராதன விஷயங்களாகிவிட்டன. கவிதாயினி என்றால் என்ன அர்த்தம்? கவிஞர் என்ற பதமே ஆண்பால் - பெண்பால் இரண்டிற் கும் பொதுவானது தான். அந்த அடைமொழியை கவிஞர் மேத்தா என்றும், கவிஞர் நிர்மலா சுரேஷ் என்றும் இரு பாலருக்குமே போட்டு அழைக்கலாம். பெண்பாலுக்கு கவிதாயினி எனப் புதிதாக ஒரு வெஜிடபிள் பிரியாணி வார்த்தையைப் போட்டு குழப்ப வேண்டியதில்லை. அரசியல்வாதிக்கும் சினிமாக்காரர்களுக்கும் கிடைக்கும் விளம்பரம் இலக்கியவாதிக்கோ விஞ்ஞானிக்கோ கிடைப்பதில்லையே? நம் நாட்டின் சாபக்கேடு அது. அறிவும் விஞ்ஞானமும் இங்கு இரண்டாம் பட்சமானவையாகக் கருதப்படுகின் றன. சினிமாவும் அரசியலுமே முதலிடம் பெறுகின்றன. சராசரி மலையாளிக்கும் சராசரித் தமிழனுக்கும் என்ன வித்தியாசம்? சராசரி மலையாளி தாய் மொழிப் பற்றைச் சொல்லிலும் செயலிலும் காட்டுவான். கடைப்பிடிப்பான். தாய் மொழிப் பத்திரிகைகள், புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கி ஆதரிப்பான். புகழ்வான். போற்றிப் பாதுகாப் பான். சராசரி தமிழன் தாய்மொழிப்பற்றை மேடைகளில் ஆவேசமாகக் காண்பிப்பான். 'உயிர் தமிழுக்கு - உடல் மண்ணுக்கு என்று டயலாக் பேசுவான். சுவர்களில் எழுதி முழக்குவான். நடைமுறையில் சினிமாவுக்கும் சாராயக்க டைக்குமே காசு செலவழிப்பான். தமிழைக் காசு கொடுத்து வாங்கிப் படிக்க மாட்டான். கடன் வாங்கியா வது குழந்தைகளை ஆங்கிலப் பள்ளியில் சேர்ப்பான். ஆங்கிலேயரைப் போல் உடையணிவான். அப்படித் துரையாகத்தலை கனத்துத்திரிவான் - இதுதான் வித்தியா சம். எழுத்தாளர்கள் எதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார் களா? எதிலும் ஒற்றுமையாயிருக்கக்கூடாது என்பதில் மிகவும் திடமான ஒற்றுமையோடு இருந்து வருகிறார்கள். பேனாவால் எழுதுவது நல்லதா? பென்சிலால் எழுதுவது நல்லதா? பேனாவால் எழுதுவது என்றால் கறுப்புமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/75&oldid=923272" இலிருந்து மீள்விக்கப்பட்டது