பக்கம்:தீபம் யுகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 75 யால் எழுதுவது நல்லதா? நீலமையால் எழுதுவது நல் லதா? இப்படி எழுத்துக்குச் சம்பந்தமில்லாத உப்புப்பெறாத ஷயங்களைப் பற்றி சதா யோசித்துக் கொண்டிருப்பவர் கள் எழுதாமல் இருப்பதே நல்லது. தமிழ் வாரப்பத்திரிகைகள் ஆற்றும் பணி? மக்கள் தலையில் மிளகாய் அரைப்பது. மசாலா வியாபா ரம் இத்யாதி. தமிழ் நாட்டு வாசகன் எப்படிப்பட்டவன்? எழுத்துக்களைப் படிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் தகுதி இல்லாத நிலைக்குத் தாழ்ந்து, துணி இல்லாமல் பெண் படங்களைப் பார்க்கும் அளவு மட்டமாகிவிட்டான் என்று அவனைப் பிரபல பத்திரிகைகள் எடை போட்டு முடித்திருக்கின்றன. அந்த நிறுவை தன்னை அவமானப்ப டுத்துவதைக் கூட அவன் இன்னும் உணர்ந்து சீறி எழ முன் வரவில்லை. தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்களில் சிலர் ரொம்பவும் மோசமாகப் போகிறார்களே? அவர்கள் பைசா நரகத்தில் சாய்ந்த கோபுரங்கள் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்ப் பத்திரிகைகளின் போட்டியில் ஆரோக்கியம் இருக்கிறதா? நாகரிகம் கூட இல்லை. அப்புறம் எப்படி ஆரோக்கியம் இருக்க முடியும்? பல பத்திரிகைகள் விஷயத்தின் தரத்தை நம்புவதை விட கவர்ச்சிப் படங்களைக் காட்டி மயக்குவ தற்குத் தொடங்கி விட்டன. தமிழ்ப் பத்திரிகை உலகம் வாசகர்களை எங்கே அழைத் துச் செல்கிறது? அழிவின் எல்லைக்கு அழைத்துச் செல்கிறது. பயனின் மைக்கும், அறிவு மலட்டுத் தனத்துக்கும் சவிஸ்தாரமாக வழிகாட்டி அழைத்துப் போகிறது. பலி பீடம் போகும் ஆடுகள் போல் வாசகர்களும் போய்க் கொண்டிருக்கிறார் கள். அறிந்தே செய்யும் பாவம் என்பது என்ன? தமிழ்ப் பத்திரிகைகள் சினிமாவுக்கு அளிக்கும் முக்கியத் துவத்தைச் சொல்லலாமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/76&oldid=923273" இலிருந்து மீள்விக்கப்பட்டது