பக்கம்:தீபம் யுகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 77 நாவலாசிரியர் தாராசங்கர் பானர்ஜி, மலையாள எழுத்தாளர் பாரப்பு ரத்து, பி. கேசவதேவ், யாழ்ப்பாணம் இரசிகமணி கனகசெந்திநாதன், கேரளம் தகழி சிவசங்கரப்பிள்ளை, உருபு' என்கிற பி.சி. குட்டி கிருஷ்ணமேனன் இலக்கியச் சந்திப்புகளும் பிரசுரம் பெற்றிருக்கின் றன. திருலோக சீதாராம், ம. ரா. போ. குருசாமி, கா. அப்பாத்துரை, கே. சுவாமிநாதன், மீ. ப. சோமசுந்தரம், ந. பிச்சமூர்த்தி, எஸ். மகராஜன், க. சந்தானம், முருகு சுப்பிரமணியன், மே. வி. வேணுகோ பாலப்பிள்ளை, ஏ. கே. ராமானுஜன், பாபானி பட்டாச்சார்யா, ஏ. என். சிவராமன், ம.பொ. சிவஞானம், கு. ராஜவேலு, ஆர். சண்முக சுந்தரம், வைக்கம் முகம்மது பவீர், ஆர். கே. நாராயணன், ராஜா ராவ், மு. வரதராசன், உருதுக்கவி ரகுபதி ஸஹாய், பி. பத்மராஜூ, பிரபாகர் மாச்சே, ராஜம் கிருஷ்ணன், விஸ்வநாத சத்யநாராயணா, தமிழ்க் கடல் இராய.சொ. சா. கணேசன், என்று பரந்த நோக்குடன் 'இலக்கியச் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. வங்க எழுத்தாளர் சிவகுமார் ஜோஷியை சு. கிருஷ்ணமூர்த்தி பேட்டி கண்டு எழுதினார். மகாகவி பூரீ பூரீ, மராட்டிய எழுத்தாளர் ஜயவந்த் தள்வி, கேரளம் எம். டி. வாசுதேவன் நாயர், கன்னடம் மத்துர் கிருஷ்ண மூர்த்தி, ஹிந்தி எழுத்தாளர் டாக்டர். ராமவிலாஸ் சர்மா, மலையாளம் வயலப்பில் பூரீதர மேனன், கன்னடம் கே. வி. புட்டப்பா, மலையாத்தூர் இராம கிருஷ்ணன், ஞானபீடம் பரிசு பெற்ற கவிஞர் தினகர், வங்கக் கவிஞர் விஷ்ணுதே என்று பல மொழிகளைச் சேர்ந்தவர்களின் பேட்டியைத் தீபம் வெளியிட்டிருக்கி நிது. நெ. து. சுந்தரவடிவேலு, பேராசிரியர் ந. சஞ்சீவி, சென்னை மாநகர நூலக ஆணைக்குழுத் தலைவர் கே. பி. சுந்தரம், டாக்டர் முத்து சண்முகம், டாக்டர் வ. சுப. மாணிக்கம், டாக்டர் எஸ். இராம.கி ருஷ்ணன், காந்தி கிராமம் டாக்டர் செளந்தரம் ராமச்சந்திரன், சென்னை பல்கலைக்கழகம்துணைவேந்தர் மால்கம் ஆதிசேஷய்யா, டாக்டர் கார்த்திகேசு சிவத்தம்பி, டொமினிக் ஜீவா ஆகியோரும் இலக்கியச் சந்திப்புகளில் அவரவர் அபிப்பிராயங்களை வெளியிட் டுள்ளனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/78&oldid=923275" இலிருந்து மீள்விக்கப்பட்டது