பக்கம்:தீபம் யுகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 79 பெற்று, இரண்டு பதிப்புகள் வந்தன. சென்னைக்கு வந்தேன் புத்தக மாக வரவில்லை) எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் பேட்டிகளைத் தொடர்ந்து வெளியிட்ட தீபம் அவ்வப்போது தொழில் அதிபர்களை சந்தித்து, அவர்களது கருத்துக்களை சேகரித்தும் பிரசுரித்திருக்கிறது. நா. மகாலிங்கம், ஜி. ஆர். தாமோதரன், ஜி. டி. நாயுடு, ஜி. கே. சுந்தரம், வி. எஸ். தியாகராஜ முதலியார், எச். வி. ஆர், ஐயங்கார், எம். எம் முத்தையா, டி. சி. தோத்தாரி, எம். சி. டி. பெத்தாச்சி, கே. ஈஸ்வரன், பத்மபூரீ கே. எஸ். ஜி. ஹாஜா ஷெரிப் ஆகியோரின் பேட்டிகள் வெளிவந்துள்ளன. மற்றொரு விதமான பேட்டியையும் தீபம் வெளியிட்டிருக்கிறது. மரபிலும் முறையான தமிழ்ப்படிப்பிலும் ஊறிய பேராசிரியர்கள் தற்காலத் தமிழ் மற்றும் இலக்கிய முயற்சிகள் பற்றி என்ன நினைக்கி றார்கள் என்பதை அறிவதற்காக பலரை சந்தித்து, இலக்கிய விஷயங் கள் குறித்த கேள்விகளைக் கேட்டு, அவர்களது அபிப்பிராயங்களை சேகரித்துப் பிரசுரித்தது. அவ்விதம் பேட்டி கண்டு கருத்துக்களை சேகரித்தவர் சேவற்கொடியோன், பல்வேறு கல்லூரிகளின் தமிழ்த்து றைத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். பேராசிரியர்களான சுப. அண்ணாமலை, சு. குழந்தைநாதன், மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி முத்தம்மாள் கெளரிநா தன், கண. சிற்சபேசன், திருமதி சக்தி பெருமாள், இரகுபதி சாமிநா தன், எஸ். வி. சுப்பிரமணியன், டாக்டர் தமிழண்ணல், சி. கனகசபா பதி, வா. சு. கோவிந்தன், பள்ளத்தூர் கல்லூரி சரஸ்வதி இராமநாதன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இவர்கள் இப்படிக் கருதுகி றார்கள் என்ற தலைப்பில் அவை பிரசுரம் பெற்றன. இந்தப் பகுதிக்காக பெங்களுள் தமிழ்ப் பேராசிரியை தி. க. நாகாம்பாள் கருத்துக்களை பெங்களுர் எழுத்தாளர் அமுதவன் சேக ரித்து அனுப்பியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/80&oldid=923278" இலிருந்து மீள்விக்கப்பட்டது