பக்கம்:தீபம் யுகம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 81 அடுத்து, 1. பூச்சருகு என்ற தனது நூலுக்கு என். ஆர். தாசன் எழுதியது. 2. புதுக்கோலம் நூலுக்கு கவிதாமணி, 3. சறுக்கு மரம் நாவலுக்கு மலர்மன்னன் எழுதிய முன்னுரை. இதற்குப் பின் இந்தப் பகுதி இடம்பெறவில்லை. மீண்டும், தீபம் 93 வது இதழில், நினைவில் நிற்கும் முன்னுரை' என்று, அசோகமித் திரன் கதைகள் இன்னும் சில நாட்கள் தொகுப்புக்கு எஸ். வைதீஸ்வ ரன் எழுதிய முன்னுரை பிரசுரமாயிற்று. அதன் பிறகு எதுவும் வர வில்லை. 'ஊஞ்சல் கடிதங்கள் - ஒரு புதிய இலக்கியப் பாலம் என்றொரு பகுதி தீபம் முதலாவது ஆண்டில் வெளிவந்தது. ஊஞ்சல் கடிதங்கள என்பதற்கு விளக்கமும் எழுதப்பட்டிருந் தது. - கி. ராஜநாராயணன் விளையாட்டு போல ஒரு கடிதப் பத்திரி கை' யை ஆரம்பித்து நடத்தியிருந்தார். ஒரு நோட்டுப் புத்தகத்தில் அவர் சில நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதினார். அதை முதலாவது ஒரு நண்பருக்கு அனுப்பினார். அந்த நண்பர். அனைத்து நண்பர்க ளுக்குமோ அல்லது ஒன்றிருவருக்குகோ கடிதம் எழுதி அடுத்த நண்பருக்கு அனுப்ப வேண்டும். அவர் தன் விருப்பம் போல் கடிதங் கள் எழுதி இன்னொருவருக்கு அனுப்புவார். கடைசியாக உள்ள நண்பர் கடிதங்கள் எழுதி, அந்த நோட்டை கி. ரா. வுக்கே அனுப்ப வேண்டும். இப்படி அங்கும் இங்குமாக அசைந்து நகர்வதால் அதற்கு 'ஊஞ்சல்' என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது. கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, சுந்தரராமசாமி, தீப, நடராஜன், நா. பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், தி.க. சிவசங்கரன், அதில் கடிதங்கள் எழுதியிருந் தார்கள். ரசமான, சுவைமிக்க, ரகம் ரகமான கடிதங்கள். தீபம் அத்தனை கடிதங்களையும் பிரசுரிக்கவில்லை. கி. ராஜநா ராயணன் கு. அழகிரிசாமி இருவரும் எழுதிய இரண்டு கடிதங்களை முதலில் வெளியிட்டது. அடுத்து ஊஞ்சல் நோட்டில் இல்லாத கடி தம் ஒன்றை - புதுமைப்பித்தன் ரகுநாதனுக்கு எழுதியதை பிரசுரித் திது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/82&oldid=923280" இலிருந்து மீள்விக்கப்பட்டது