பக்கம்:தீபம் யுகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 தீபம் யுகம் அதன் பிறகு, வல்லிக்கண்ணனும் தி.க. சிவசங்கரனும் தங்களுக் குள் எழுதிக் கொண்ட 'ஊஞ்சல் கடிதங்கள் இரண்டை அச்சிட்டது. பின்னர், கி. ரா., கிருஷ்ணன்நம்பிக்கு எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டது. அவ்வளவு தான். 'திரும்பிப் பார்க்கிறோம் என்று ஒரு பகுதி சில இதழ்களில் இடம் பெற்றுள்ளது. - பழைய இலக்கியப் பத்திரிகைகளிலிருந்து சில முக்கிய அம்சங் கள் மறுபிரசுரம் செய்யப்பட்டன. சுந்தா மணிக்கொடி இதழில் எழுதிய கதையும் கதாரசிகர்களும் என்றொரு கட்டுரை வந்துள்ளது. பிறகு, க.நா.சு. நடத்திய இலக்கிய வட்டம் இதழ்களிலிருந்து இரண்டு கட்டுரைகள் - 1. கன்னட ஆசிரியர் கோபால கிருஷ்ண அடிகா எழுதிய "இலக்கிய ஆசிரியனும் அரசாங்க ஆதரவும் என்பது. 2. அறிமுகம் - அறிவு சம்பந்தமான துறைகளைச் சேர்ந்த இளம் தலைமுறையினர் பற்றிய கட்டுரை. 'காலத்தை வென்ற சிறுகதைகள் என்று, வெவ்வேறு காலகட் டத்தில் வெளிவந்த அபூர்வமான சிறுகதைகளை கண்டெடுத்து வழங்க முன்வந்தது தீபம். - முதலாவதாக சுவாமிநாத ஆத்ரேயன் சிறுகதை 'ராமா நீயெட' பிரசுரமாயிற்று. அடுத்து வரிசையாக வந்தவை: ப. பூரீனிவாசன் எழுதிய 'திருமணம்', எம். வி. வெங்கட்ரா மின், கோடரி, வல்லிக்கண்ணனின் பெரிய மனுஷி, கு.அழகிரிசா மியின் வெந்தழலால் வேகாது. தொடர்ந்து இத்தலைப்பில் சிறுகதைகள் பிரசுரம் பெறவில்லை. ஆறங்கம் என்றொரு பகுதி. ஒரு பிரச்சினையைக் கூறி, அத்துறை சம்பந்தப்பட்ட ஆறு பேர்களிடம் கருத்து கேட்டு, வெளியிடுவது. முதலில், தமிழில் புத்தக வெளியீட்டுத்துறை எழுத்தாளர்க ளுக்கு லாபமாக அமைய நீங்கள் சொல்லும் யோசனைகள் என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/83&oldid=923281" இலிருந்து மீள்விக்கப்பட்டது