பக்கம்:தீபம் யுகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தீபம் யுகம் "இலக்கியத் தாளிப்பான அபிப்பிராயங்களை தந்தது இந்தப் பகுதி. இதைத் தயாரித்தவர் சே. சேவற்கொடியோன். அண்மையில் நீங்கள் பத்திரிகைகளில் படித்த தமிழ்ச்சிறுகதைக ளில் உங்களது நினைவில் பசுமையாக நிலைத்து வாழும் சிறுகதை பற்றிச் சொல்லலாமா என்பது கேள்வி. இதற்குப் பதில் அளித்தவர்கள்: கலாப்ரியா, ஆர் நடராஜன், திருமதி எஸ். ஜோதி. சுப. செல்வம், இரா. மீனாட்சி. இவ்வாறு விதம் விதமான கேள்விகளுக்கு அஞ்சு பேர் பதில் அளிப்பதனால் அது 'அஞ்சறைப் பெட்டி ஆயிற்று. தமிழில் வெளிவரும் சிற்றிதழ்கள் பற்றி: இந்த நூலகப் பணி உங்களுக்கு எண்ணென்ன அனுபவ நிறைவைத் தருகிறது? (சென்னை லெண்டிங் லைபிரரி உரிமையாளர்கள் ஐவரிடம் கேட்கப் பட்டது.) அரசியல்வாதிகளுக்கு பத்திரிகைகள், நாவல்கள், தமிழில் உள்ள இலக்கிய ஆர்வம் பற்றி - - சமீப காலத்தில் வெளியான கவிதைத் தொகுதிகளில் நீங்கள் விரும்பிப் படித்த புத்தகம் - நியூவேவ் கதைகள், திரைப்படங்கள் பற்றி என்ன நினைக்கிறீர் கள்? பத்திரிகைக் கதைகள், நாவல்கள் பற்றி சினிமாக் கதை எழுத்தா ளர்களின் கருத்து. உங்களை மிகக் கவர்ந்த மேற்கோள் எது? இன்றைய இலக்கியப் போக்குகள் பற்றிஉங்களைக் கவர்ந்த கதாபாத்திரம்? பார்த்து ரசித்த ஏதாவது ஒரு திரைப்படம் பற்றி. தொழில் வர்த்தகப் பிரமுகர்களிடம்: புத்தகம் பத்திரிகை படிப்ப துண்டா? சிறுகதை, நாவல் பற்றி உங்கள் கருத்து என்ன? இந்த விதமாக அனைத்து விஷயங்களும் தாளிக்கப்பட்டன. என்று சொல்லலாம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/85&oldid=923283" இலிருந்து மீள்விக்கப்பட்டது