பக்கம்:தீபம் யுகம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 85 11. விவாதங்கள் சர்ச்சைகள் இலக்கிய விவாதங்களும், கருத்துப் போர்களும் இலக்கியப் பத்திரிகைக்கு உயிர்ப்பும் உத்வேகமும் அளிக்கும். இலக்கியச் சண் டைகள் சில பத்திரிகைகளுக்கு விசேஷ கவனிப்பு பெற்றுத் தந்திருக் கின்றன. விவாதத்தில் ஈடுபடுகிற - பங்குபெறுகிற - இலக்கியவாதி களை பொறுத்து அமையக் கூடிய விஷயம் அது. தீபம் இதழிலும் இலக்கிய விவாதங்கள் தேவை எனக் கருதிய நா. பா. அதற்கான களம் அமைத்துக் கொடுத்தார். தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கருத்துக் கட்டுரைகள் பிரசுரிக்கப் பட்டன. தமிழ்ச் சிறுகதைகளின் பொற்காலம் இது என்று கு. அழகிரி சாமி ஆறு பக்கங்களில் விவரித்திருந்தார். தமிழ்ச் சிறுகதை வளரவில்லை. குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஒரு சிலர் தான் நல்ல சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள் என்று க.நா. சுப்பிரமணியம் ஆறு பக்கங்களில் கருத்த அறிவித்தார். இந்த விவாதம் பட்டி மன்றம் என்ற தலைப்பில் 1967 ஏப்ரல் இதழில் ஆரம்பமாயிற்று. இன்று உலகம் முழுவதிலும் உள்ள எழுத்தாளர்கள் எழுதும் கதைகளுக்கு இணையாக - சிலசமயங்களில் அந்தக் கதைகளையும் விடச் சிறந்த கதைகளைத் தமிழ் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். தலை சிறந்த தமிழ் எழுத்தாளர்களுக்கு இணை சொல்லக் கூடிய சிறுகதை ஆசிரியர்கள் மற்ற இந்திய மாநிலங்களில் இல்லை. தமிழ்நாட்டின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் என்று புது மைப்பித்தன், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், ஜானகிராமன், ஆகிய நால்வரையும் நான் கருதுகிறேன். நான் படித்த அளவில் நல்ல பல அல்லது சில சிறுகதைகள் எழுதியிருப்பவர்கள் சிதம்பர சுப்ரமணி யன், ப. ரீனிவாசன், கிருஷ்ணன் நம்பி, ராஜம் கிருஷ்ணன், சிற்சில நல்ல அம்சங்களைக் கொண்ட கதைகளை - பத்திரிகைகளில் வெளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/86&oldid=923284" இலிருந்து மீள்விக்கப்பட்டது