பக்கம்:தீபம் யுகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 --- தீபம் யுகம் வந்தால் நான் ஒதுக்கிடவிடாமல் படிக்க விரும்பும் கதைகளை எழுது கிறவர்கள். நா. பார்த்தசாரதி, ரகுநாதன், ஆ.மாதவன், ம. ராஜாராம், பி.எஸ். ராமையா, க. நா. சுப்பிரமணியம். தமிழ்ச் சிறுகதைப் படைப்புத் துறையில் இப்போதோ சமீபத் திலோ தேக்கம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. துரிதமாக வளர்ச்சி யும் முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றன. நல்ல எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போற்றி, அதே சமயத்தில் பம்மாத்துப் பண்ணுகிற வர்களின் எழுத்துக்களைப் புறக்கணிக்கும் அளவுக்குப் பத்திரிகைக ளிடத்திலும் வாசகர்களிடத்திலும் நல்ல மாறுதலும் விழிப்பும் சிறிது சிறிதாக ஏற்பட்டு வருகின்றன. எனவே இதைத் தமிழ்ச் சிறு கதைக ளின் பொற்காலம் என்று நான் கூறுகிறேன். ஏனென்றால், தமிழ் நாட்டைப் போல் இரு மடங்கு மும்மடங்கு ஜனத் தொகையைக் கொண்ட வெளிமாநிலங்களிலும், வெளிநாடுக ளிலும் - நூற்றுக்கு நூறு படித்தவர்களைக் கொண்ட நாடுகளில் கூட -ஒருதலைசிறந்த கதாசிரியர் இல்லாதிருக்கும் போது, தமிழ்நாட்டில் இன்று மூன்று தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் அல்லவா? - கு. அழகிரிசாமி கட்டுரையின் சாரம் இது. 'தமிழில் வெற்றி பெற்றவர்கள் ஒரு நால்வரே என்று க. நா. சு. எழுதிய கட்டுரையின் முக்கியக் கருத்து. சிறுகதை என்பது கவிதை போலவே ஒரு பவித்திரமான (சமயச் சார்பற்ற அர்த்தத்தில்) தெய்வீகமான ஒரு உதயம். ஆயிரக்கணக் கான சிறுகதைத் தொழிலாளிகளில் கலைஞர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் நூறு பேர் கூட இராது. உலக இலக்கியப் பரப்பிலே, ஐம்பது பேர்கள் தேறலாம். அந்தத் தரமான உருவத்தை தமிழில் சிருஷ்டிக்க முயன்று வெற்றி பெற்றவர்கள் என்று ஒரு நால்வரைக் குறிப்பிடலாம். (புதுமைப்பித்தன், மெளனி, கு.ப. ராஜகோபாலன், லா.ச. ராமாமிர்தம்). இந்த அளவில் பிற இந்திய மொழிகளில் சிறு கதைகள் வளர்ந்திருக்கின்றனவா என்று கேட்டால், என் படிப்புக் கெட்டிய வரையில், பல இந்திய மொழிக் கதைகளைப் படிப்பவன் என்கிற ஆதாரத்துடன், இல்லை என்று தான் சொல்லுவேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/87&oldid=923285" இலிருந்து மீள்விக்கப்பட்டது