பக்கம்:தீபம் யுகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 87 இரண்டாவது வரிசையாக நான் குறிப்பிடும் பத்துப் பன்னி ரண்டு ஆசிரியர்களின் தரத்துக்கு சிறுகதை வளர்ந்திருக்கிறது. (ந. பிச்சமூர்த்தி, சி.சு. செல்லப்பா, ந. சிதம்பரசுப்பிரமணியன், த.நா. குமாரசுவாமி, தி.ஜ. ரங்கநாதன், கு.அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி), ஆனால், சாப விமோசனம், பாற்கடல். பிரபஞ்சகானம் போன்ற வற்றுடன் வைத்துப் பார்க்கக் கூடிய கதைகள் வேறு இந்திய மொழிக ளில் இன்னும் உண்டாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். (க.நா.சு. கட்டுரையிலிருந்து) இவ்விருவரின் அபிப்பிராயங்களை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் கருத்துக்கள் எழுதியிருந்தனர். மே மாத இதழில், பொற்காலம் தான் என்ற நோக்கில் மா.பா. குருசாமி, எம். கே. மணிசாஸ்திரி இருவரும் கருத்து தெரிவித்தனர். பொற்காலம் அல்ல என்று சரத்கம லன் எழுதினார். அழகிரிசாமியும் இலக்கிய விமர்சனமும் என்று நகுலன் விரிவாக கட்டுரையும் குறைவும் நிறைவும் என்று கு.அ., க.நா.சு. கட்டுரைகளை விமர்சித்து ஆர்வியும் கட்டுரை எழுதியுள்ள னர் பத்துப் பக்கங்களில். ஜூன் மாத இதழில் எழில் முதல்வன், வை. ரங்கநாதன், சித்திர பாரதி, வெ. சாமிநாதன், இந்திரா பார்த்தசாரதி, யா. இராயப்பன், விவாதத்தை வளர்ந்திருந்தார்கள். அவை 17 பக்கங்களில் பரவியி ருந்தன. --- பட்டிமன்ற எதிரொலி என்று தொடர்ந்து சில இதழ்களில் பல எழுத்தாளர்களின் கடிதங்கள் இடம் பெற்றன. இலங்கையிலிருந்து இக்பால், மலேசியத் தமிழ்ச்சிறுகதைகளைக் குறிப்பிட்டு கோலாலும் பூர் சை. பீரமுகம்மது, மற்றும் சுப. கோ. நாராயணசாமி, சுவாமிநாத ஆத்ரேயன், சா. நாகலிங்கன், மகரிஷி, முருகசரண் விவேகானந் தன், த. பன்னீர் செல்வம், குமுதன், ரா. சுவாமிநாதன், எஸ். ஏ. சவால், கே. எஸ். சிவகுமாரன் (இலங்கை), பூதலூர் முத்து ஆகியோ ரின் கருத்துக்கள் பிரசுரம் பெற்றுள்ளன. பட்டி மன்றத்தில் பலரும் பங்கு பற்றினார்கள் என்ற திருப்தி ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து வெவ்வேறு பொருள்கள் பட்டி மன்ற விவாதத்துக்கு முன் வைக்கப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/88&oldid=923286" இலிருந்து மீள்விக்கப்பட்டது