பக்கம்:தீபம் யுகம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 தீபம் யுகம் 'இன்றையக் கவிதை' என்று நா. காமராசன், கருத்தும் வெளிவந் தது. மேலும், தமிழன்பன், எஸ். பி. சுசீலா, பாரவி, சேவற்கொடி யோன், மன்னை இனமதி காந்தன் எதிரொலியாகக் குரல் எழுப்பி யுள்ளனர். மற்றொரு சந்தர்ப்பத்தில், தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலிருந்து வந்த டாக்டர் ஆல்பர்டஃபிராங்க்ளின், சென்னை இலக்கியச் சிந்தனை சிறப்புக் கூட்டத்தில், தற்காலத் தமிழ் இலக்கியம் பற்றி ஒரு கட்டுரை வாசித்தார். தமிழ் இலக்கியம், எழுத்தாளர்கள் குறித்த அவரது அபிப் பிராயங்களைக் கூறிய அந்தக் கட்டுரை, விண்வெளியிலிருந்து சில கருத்துக்கள் என்ற தலைப்பில் தீபத்தில் பிரசுரமாயிற்று. விவாதத்துக்குரிய அக்கட்டுரையின் எதிரொலியாக சி.சு.செல் லப்பா ஒரு கட்டுரை எழுதினார். சேவற்கொடியோன், அம்பையா லன் ஆகியோரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். வேறொரு சமயம், டாக்டர் தா.வே. வீராசாமி தமிழில் முதல் தேசிய நாவல் என்ற கட்டுரையை தீபத்தில் எழுதினார். திரிசிரபுரம் வை. குருசாமி சர்மா எழுதிய பிரேம கலாவதீயம்' என்ற நாவல் தான் தமிழின் முதல் தேசிய நாவல் என்று கூறி, அதைப் பற்றி விரிவாக எழுதியிருந்தார் அவர். . அது சரியல்ல, பிரேம கலாவதீயம் தமிழின் முதல் தேசிய நாவல் இல்லை என்றும், அசன்பே சரித்திரம் எனும் இலங்கைத் தமிழ் நாவல் தான் முதலாவது என்றும் பெ. கோ. சுந்தரராஜன் - சோ. சிவபாதசுந்தரம் விவாதித்திருந்தனர். - - இது பற்றி மேற்கொண்டு எவ்விதமான தகவலும் வெளிவர வில்லை. முதல் தமிழ் நாவல் என்ற சிறப்பைப் பெற்றுள்ள மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்' நாவலை சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் திருத்திய பதிப்பாக வெளியிட்டது. அதில் உள்ள வடமொழிச்சொற்களைத் திருத்தி, தூய தமிழ்ச் சொற்களைப் புகுத்தி வேண்டாத வேலை (தேவையில்லாத திருப்பணி) செய்திருந்தது பதிப்பகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/91&oldid=923290" இலிருந்து மீள்விக்கப்பட்டது