பக்கம்:தீபம் யுகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தீபம் யுகம் 12. இலக்கிய விமர்சனம் இலக்கிய விமர்சன வளர்ச்சிக்கு தீபம் தன்னால் இயன்ற அள வுக்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறது. இலக்கியப் படைப்புகள், படைப்பாளர்கள் பற்றி ஆழ்ந்த விமர்சன முயற்சிகள் தீபத்தில் இடம் பெறவில்லை என்றாலும், அவ்வப்போது விமர்சனங்களை வாசகர்க ளிடமிருந்து வரவேற்று பிரசுரிப்பதில் தீபம் ஆர்வம் கொண்டிருந்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை புத்தக மதிப்புரைக்காக்க கணிச மான பக்கங்கள் ஒதுக்கப் பட்டன. புதிய புத்தகங்களை அறிமுகம் செய்யும் விதத்தில் 'தீபம் மதிப்புரைப் பகுதி விளங்கியது. சில சமயங்களில், முக்கியமான சில நூல்கள் பற்றிய விரிவான அறிமுகக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இலக்கிய விமர்சன வளர்ச்சிக்கு உதவக்கூடிய முறையில் பல கட்டுரைகள் தீபம் வெளியிட்டு வந்தது. சென்னை இலக்கியச் சிந்த னை அமைப்பு ஒவ்வொரு வருடமும் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதை என்று, இலக்கியச் சிந்தனையின் மாதப் பரிசு பெற்ற பன்னி ரண்டு சிறுகதைகளிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து பரிசளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் பிரபல எழுத் தாளர் அப்படி தேர்ந்து எடுப்பார். தனது தேர்வுக்கான காரணத்தைக் கூறும் வகையில் அவர் அந்த ஆண்டின் பன்னிரண்டு சிறுகதைகளை யும் விரிவாக விமர்சனம் செய்வார். அவருடைய கட்டுரை அந்த ஆண்டுச் சிறுகதைகளின் தொகுப்பில் முன்னுரையாக அச்சிடப்பெ றும். அவ்வித விமர்சனக் கட்டுரைகளை ஆண்டுதோறும் தீபம் ஏற் றுப் பிரசுரம் செய்வதை வழக்கமாக்கியிருந்தது. தீபம் இதழ்களில் வெளிவரும் சிறுகதைகளை விமர்சனம் செய்து கட்டுரை எழுதும் படி அதன் வாசகர்களை ஊக்குவித்தது. 1970களில் இந்த முயற்சிகளை வரவேற்று உற்சாகப்படுத்தியுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/93&oldid=923292" இலிருந்து மீள்விக்கப்பட்டது