பக்கம்:தீபம் யுகம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 93 தீபத்தில் வந்த சிறுகதைகள், குறுநாவல்கள் பற்றி வாசக ரசிகர் கள் ஆர்வத்துடன் கட்டுரைகள் எழுதியுள்ளனர். சிறந்த கட்டுரைக் குப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அத்தகைய விமர்சனக் கட்டுரை கள் குறித்து வாசகர்கள் அபிப்பிராயங்களும் வெளியிடப்பட்டன. பிறகு தங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு நாவலை விமர்சித்து எழுதும் படி வாசகர்களைத் தூண்டியது தீபம். நா.பா. வின் சமுதாய வீதி' நாவல் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றதும், அந்த நாவல் குறித்த விமர்சனங்களை வாசகர்களிடமி ருந்து வரவேற்று, அவற்றில் முக்கியமானவற்றை வெளியிட்டது. இக்கட்டுரைகள் பலவும் நாங்கள் விமர்சிக்கிறோம் என்ற தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்டன. ஜெயகாந்தனின் சில நேரங்க ளில் சில மனிதர்கள் நாவல் விமர்சனமும் இவ்வாறு வெளிவந்துள் ளெது. எனக்குப் பிடித்த சரத்சந்திரர் கதை என்ற தலைப்பில் விமர்சன் கட்டுரை எழுதி அனுப்பும் படி வாசகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்ட னர். அதன்படி வந்த கட்டுரைகள் தீபத்தில் பிரசுரமாயின. மாணவர்களை விமர்சன முயற்சிகளில் ஈடுபடும்படி தீபம் ஊக் குவித்தது. கு. அழகிரிசாமியின் கதைகள், லா.ச.ரா. கதைகள் பற்றி வந்த விமர்சனக் கட்டுரைகள் தீபத்தில் இடம் பெற்றிருக்கின்றன - இரசனை அரங்கம் என்ற தலைப்பில். 'பத்தாண்டுகளில் தீபம்' என்று இலக்கிய ரசிகர்கள் விமர்சித்து எழுதியுள்ளனர். திருவனந்தபுரம் இலக்கிய நண்பர்களும், இதர சில இடங்களின் ரசிகர்களும் அங்கங்கே கூடிதீபம் வளர்ச்சியை விமர்சித் திருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய விமர்சனங்களையும் யோச னைகளையும் ஏற்று தீபம் வெளியிட்டிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/94&oldid=923293" இலிருந்து மீள்விக்கப்பட்டது