பக்கம்:தீபம் யுகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9连 - தீபம் யுகம் 13. வாசகர் தொடர்பு வாசகர்களின் அபிப்பிராயங்களுக்கு நா. பா. மதிப்பு அளித்து வந்தார். வாசகர்களின் கடிதங்களை அவர் வரவேற்றார். ரசித்தவற் றைப் பற்றி கடிதங்கள் எழுதும் படி வாசகர்களை அவர் ஊக்குவித் தார். வாசகர்களின் கடிதங்கள் சங்கம் என்ற பகுதியில் இதழ் தோறும் வெளிவந்தன. , - 'அபிப்பிராயமும் புலமையும் ஒன்று கூடுகிற இடத்துக்குச் சங் கம் என்று பெயர். வாசகர்களின் அபிப்பிராயங்கள் ஒன்று கூடுகிற பகுதிக்கு சங்கம் என்று பெயர் தந்து தனது வாசகர்களின் நயமான கடிதங்களை வரவேற்கிறது. தீபம். இந்தப் பகுதி வாசகர்களின் இலக் கிய மேடையாக அமைய வேண்டும் என்பது எங்கள் ஆசை. எல் லாப் பத்திரிகைகளிலும் வருகிற made up கடிதங்கள் போலன்றி, சத்தியமயமான வாசகர்களின் குரல் இங்கு இந்தப் பகுதியில் ஒலிக்க வேண்டுமென விருப்புகிறோம் நாங்கள். தயை கூர்ந்து இந்தப் பகு திக்கு எழுதும் கடிதங்களில் ஆர்வத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அபிப்பிராயங்களை வரையாதீர்கள். நியாயத்தையும் சத்தி யத்தையும் அடிப்படையாகக் கொண்டு உங்கள் அபிப்பிராயத்தைப் படையுங்க்ள என்று நா. பா. அறிவித்தார். வாசகர் கடிதங்கள் தீபம் இதழ்களில் வெளிவந்த விஷயங்க ளைப் பற்றிய அபிப்பிராயங்களை தெரிவித்ததுடன், பொதுவாகப் பல பிரச்சினைகள் குறித்தும் கருத்து கூறின. சிறுவர் இலக்கியம், கவர்ச்சியும் மலிவும், தமிழ் சினிமா, பத்திரிகைகளின் போக்கு போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்தும் வாசகர்கள் எழுதினார்கள். சிறந்த கடிதங்களுக்குப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 1971-ம் ஆண்டில் தீபம் வாசகர்களுக்கு வெண்பாப் போட்டி' வைத்தது. ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதி அனுப்பும் படி கோரி யது. தற்காலம் வேண்டும் தமிழ், வங்காளதேசத்தை வாழ்த்து, கல்கி வளர்த்த கதை, காசுக்கே விற்றுவிட்டோம் காண், இந்திராவுக்கு உண்டோ இணை? - இவை நா. பா. கொடுத்த ஈற்றடிகள். ரசிகர்கள் எழுதி அனுப்பிய வெண்பாக்களில் தகுதி வாய்ந் தவை தீபத்தில் வெளியிடப்பட்டன. இந்தப் போட்டி குறுகிய காலம் தான் நடைபெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/95&oldid=923294" இலிருந்து மீள்விக்கப்பட்டது