பக்கம்:தீபம் யுகம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 95 தமிழ் உணர்வோடும், இலக்கிய ரசனை நோக்கிலும் சங்கம் அமைத்து, கூடி விவாதித்து, நிகழ்ச்சிகள் நடத்துவதில் ஆர்வம் உடை யவர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளை தீபத்தில் அறிமுகம் செய்து, அவர்களுக்கு உற்சாகமளிக்க முன் வந் தார் நா. பா. அப்படிப்பட்ட அமைப்புகள் பற்றி எழுதும் படி அறி வித்து, அவற்றை எங்கள் சங்கம் இது என்ற தலைப்பில் வெளியிட் L鲈打。 டில்லி, பம்பாய், கல்கத்தா, நகரங்களிலிருந்து, அந்நகரங்களின் விசேஷச் செய்திகளை நண்பர்கள் எழுதி அனுப்பினார்கள். டில்லி கடிதம், பம்பாய் கடிதம், கல்கத்தா கடிதம் என்று அவை பிரசுரம் பெற்றன. மலேயாக் கடிதம், இலங்கைக் கடிதம் என்றும் வந்தன. அங்கங்கு உள்ள இலக்கிய விசேஷங்களை அறிந்து கொள்வதற்கு இக்கடிதங்கள் உதவின. தீபம் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டவாசகநண்பர்கள் பலர் இருந்தனர். அவர்கள் நா. பா. வுக்கு பல வகைகளில் பெரிதும் உதவினார்கள். தீபம் வளர்ச்சிக்காக ஒரு அர்ப்பணிப்புடன், இரவு பகல் பாராது, தன்னலமின்றி, உழைத்து உதவிய அந்த ரசிக நண்பர் களை நன்றியுடன் பெருமைப்படுத்தி, அவர்களை தீபம் இலக்கியக் குடும்பம் என்று அறிமுகம் செய்தார் நா. பா. உதகமண்டலம் கிருஷ்ணசாமி, கோவை வேலாயுதம், ஆர். பாலசுப்பிரமணியன், சி. உப்பிலிசீநிவாசன், வழக்கறிஞர் எஸ். இரா மசுப்பிரமணியம், கே. வி. கிருஷ்ணன், வெ. குருராஜ், சிந்தாதிரிப் பேட்டை பாலகிருஷ்ணன், வீ. ராஜகோபால், எஸ். எஸ். ராஜன் முதலியவர்களை நமது இலக்கியக் குடும்பம் என்று கவுரவித்து எழுதியுள்ளார் நா. பா. குவெய்த் வி. வாசு வார்ஸா - போலந்து டாக்டர் ஆர். எம். சுந்தரம் ஆகியோரையும் நமது இலக்கியக் குடும்ப கீழ் அவர் அறிமுகம் செய்திருக்கிறார். - சென்னை நகரில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றி எழு துவதற்காக தீபம் 50 வது இதழ் முகல் இலக்கிய நாட்குறிப்பு' என்ற பகுதி வந்தது. நா. பா. கலந்து கொண்ட நிகழ்ச்சிகளையும், வேறு முக்கிய இலக்கிய நிகழ்ச்சிகளையும் பற்றி இது அறிவித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/96&oldid=923295" இலிருந்து மீள்விக்கப்பட்டது