பக்கம்:தீபம் யுகம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(එං8 தீபம் யுகம் 15. ஆண்டு மலர்கள் - சிறப்பிதழ்கள் நா. பா. வின் இலட்சியங்கள் உயர்ந்தனவாகவே இருந்தன. தீபம் ஆண்டு மலர் விஷயத்திலும் அவர் பெரிய அளவிலேயே ஆசைகள் வளர்த்தார். முதலாவது ஆண்டு மலரில் அவர் எழுதி யுள்ள வரிகள் இதற்கு சான்றாகும். 'நிறைந்த தரத்தோடு இந்த மலரை தமிழர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். மலர் நிறையப் படங்களையும் வண்ண வண்ண ஒவியங்களையும் இட்டு பக்க நிரப்பல் செய்யாமல் படிப்ப தற்கு நிறைவாக ஆடம்பரமில்லாது எளிய முறையில் இதை உருவாக் கியிருக்கிறோம். தமிழகத்தில் இலக்கிய வரலாற்றில் மைல்கற்கள் போல் நின்று புகழ் பெறவல்ல பல நல்ல ஆண்டுமலர்களைத் தீபம் எதிர்காலத்தில் படைக்க இருக்கிறது. அந்தப் படைப்புகளுக்கு, முதற் படைப்பான இந்த மலர் ஒர் அடையாளமே ஆகும் என்று அவர் அறிவித்துள்ளார். தீபம் முதல் ஆண்டு மலர் 1966 ஏப்ரல் மாதம் வெளிவந்தது. 'தமிழ் மறுமலர்ச்சி இலக்கியத்துக்குப் பெருமை தேடித்தரும் எல்லா நல்ல எழுத்தாளர்களும் கூடிய வரை இந்த மலரில் எழுதிப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்று நா. பா. தெரிவித்துள்ளபடி, மலரின் உள்ளடக்கம் மிகச் சிறப்பாகவே அமைந்திருந்தது. லா.ச.ரா. எழுதிய த்வனி', சுந்தரராமசாமியின் திரைகள் ஆயி ரம்' எனும் இரண்டு நெடுங்கதைகள். த.நா. குமாரசுவாமி, கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், கிருஷ்ணன் நம்பி, ராஜம் கிருஷ் ணன், ஆர். சூடாமணி, இந்திரா பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், கே. ராமசாமி எழுதிய சிறுகதைகள். அந்நாளைய தமிழக முதலமைச்சர் எம். பக்தவத்சலம் கட்டுரை 'பத்திரிகைகளின் சிறப்பான பங்கு', ரா.பூ தேசிகனின் உளஇயலும் இலக்கியமும், கி. சந்திரசேகரனின் 'உன்னமும் எழுத்தும், மற்றும் தி.ஜ.ர. ந. சிதம்பரசுப்பிரமணியன், கே. பூரீனிவாசன், ஜெயகாந்தன் கட்டுரைகள். திருச்சிற்றம்பல கவிரா யர், மல்லியம் ராஜகோபால், சாலை இளந்திரையன், இளம் பாரதி, வழிப்போக்கன், பரந்தாமன் கவிதைகள் மலரில் இடம்பெற்றுள்ளன. 150 பக்கங்களில், இலக்கியத் தரமான விஷயங்களைக் கொண்ட இம்மலரின் விலை 2 ரூபாய் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_யுகம்.pdf/99&oldid=923298" இலிருந்து மீள்விக்கப்பட்டது