பக்கம்:தீபம் (இதழ்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 புக் கொடியைத் தன் வீட்டு முற்றத்தில் இருந்த மரத்தில் கட்டினன். ஊரில் ஏற்றப் ப்டட முதல் கம்யூனிஸ்ட் கொடி அது. ஊரில் எல்லோருக்கும் அதைப் பார்க்கப் பார்க்க எரிச்சல். ல் என்ன பண்ணுவதென்று தெரியவில்லை. ம த் தி யா ன ம் ஆயிற்று, கொஞ்சம் கொஞ்சமாக மாலைச் சூரியன் மேற்கில் நகர்ந்தது. மரத்தில் கட்டப்பட்ட கொடி நிழலும் கிழக்கே நகர்ந்தது. கீழ் வீட் டுக் கூரையில் விழுந்தது. உடனே கீழ் வீட் டுக்காரன் சண்டைக்குத் தயாரான்ை. அந் தக் கொடியின் நிழல்கூட என் வீட்டில் படக் கூடாதென்பது கீழ் வீட்டுக்காரன் வாதம். அப்புறம் எல்லாரும் சேர்ந்து மத்தியஸ்தம் பண்ணி கொடியை அவிழ்த்தார்கள், அப் படிப்பட்ட ஊர் இது என்ருர். அன்று கேசவனத் தவிர வேறு யாரை யும் தலைவராக ஏற்க முடியாது என்று வாதம் பண் ணிக் கொண்டிருந்த நவநீதன தாமஸ் தன் முரட்டுக் குரலில் அடக்கினன். 'இந்தா பாரு ஆவநீதா! உங்க கேசவனே நம்ம யூனிய னுக்கு தலைவரா போட முடியாது அத்தோட பேச்சை விடு. ’’ அப்புறம் ஒவ்வொருவரும் அவர்களுக்குப் பிடித்த '? 蠶 பெயர்களைச் சொன்னர்கள். எதுவும் திருப்தி யாகவில்லை. கடைசியில் பெரியப்பா அவரின் தெரி வினைச் .ெ சா ன் னு ர். 'திருநெல்வேலியில கோபாலன்னு ஒருத்தர் இருக்கார். அனுபவ முள்ள தொழிற்சங்கவாதி. ரெண்டு தரம் எம்பியாக இருந்திருக்கார். பல்வேறு மட் டங்கள்ல தொடர்பு உள்ளவர். அவர் கம்யூ னிஸ்ட்தான். ஆ ைநா ம க ம் யூ ரிை ஸ் ட் ஆகவோ, நம்ம யூனியன் கட்சியூனியனகவோ இருக்கணும்ன்னு இல்ல." எல்லாருமே பெரியப்பாவின் தெரிவை ஏற்றுக் .ெ கா எண் டார் க ள், நவநீதனத் தவிர்த்து. கணிசமான அளவு உறுப்பினர் களைச் சேர்த்த பின், யூனியன் பதிவு செய்த பின்னர் திரு. கோபாலனே அணுகுவது என்று தீர்மானித்தனர். அன்று சாயங்காலம் ஷிப்ட் முடிந்த தும் சுப்பிரமணியன் அண்ணுச்சி வீட்டுக்கு பஸ் ஏறின்ை. சமாதானபுர்த்தில் இறங்கி வீட்டைத் தேடிப் போனப்ோது விள்க்கேற் றும் நேரமாகிவிட்டது. இதற்கு முன் எத் தனயோ தரம் ராபினுடனும், ப்ெரியப்பா ஆடனும் இந்த வீட்டுக்கு வந்திருக்கிருன், இப்போது தனியாக-அதுவும் அண்ஞ்ச்சி யின் சாவுக்குப் பின்-உள் நுழைய கூச்ச மாகத்தானிருந்தது. . - மனேவி வந்து கதவைத் திற்ந்தார்கள். பெல்லை அடித்தபோது அண்ணுச்சியின் 'சுப் பிரமணியம் தம்பியா வாங்க வாங்க!' அந்த முகத்தில் கவலையின் ரேகைகளும், எதிர்காலக் கவலைகளும் தேங்கிக் கிடந்தன. அண்ணுச்சி செத்தபோது இவர்களுக்கென்று சொத்து எதுவும் விட்டுச் செல்லவில்லை, பையன் அப்போது இஞ்சினியரிங் காலேஜில் இரண்டாம் ஆண்டு படித்தான். பெண் பி. எஸ்ஸி. ஃபைனல் படித்தாள். அவர்கள் படிப்புச் செலவுக்கும், அன்ரு டச் சாப்பாட் டுக்கும் ரொம்பவும் திண்டாடிப் போனர்கள். அப்போது ராபின், தாமஸ், ரகுராம் எல்லோ ரும் ஆளுக்கு ஒரு தொகை மாதாமாதம் கொடுத்தார்க்அ. இவன் கூட தன் பங்குக்கு கொஞ்சம் கொடுத்தான். அந்தம்மா ரொம் பவும் தயக்கத்துக்குப் பின் தான் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டது. அந்த வீட்டில் அவர்கள் எல்லாம் உரிமை உள்ள கு ழ ந் ைத க ள் போலத்தானிருந்தார்கள். அண்ணுச்சி உயிருடனிருந்தபோது அந்த அன்பினால்தான். இப்போதுகூட அண்ணுச்சி ன் மகள் கல்யாணத்துக்கு உதவட்டும். என்று ஒரு ஐயாயிரம் ரூபா அனுப்பி வைத் தான் ராபின், அந்தப் பெண்ணுக்குச் சரி யான வரன் இன்னும் திகையவில்லை. பையன் கூட இஞ்சினியரிங் படித்துவிட்டு வடக்கே எங்கோ வேலையில் இருக்கிருன். இப்போது கொஞ்ச்ம் நன்ருகவே குடும்பம் ஓடுகிறது. இரவு சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது அவன் தன் திட்டத்தைச் சொன்னன்: 'நான் குவைத்துக்கு வேலைக்குப் போறேன். போற துக்கு முன்னடி உங்களை ஒரு தரம் பாத்துட் டுப் போகலாம்னு வந்தேன்.’’ "அப்படியா! எப்பவும் நினைச்சா வந்து எட்டிப் பாத்துக்குவீங்க, தாமஸ் தம்பிகூட் ரெண்டு மாசம் முந்தி வந்து பாத்தது. கஷ் டப்பட்ட நேரத்தில கூடமாட ஒத்தாச்ை பண்ணுனிங்க. இப்ப சட்டுன்னு ஆளுக்கொரு திசையா போவி ஆரம்பிச்சிட்டியTகொஞ்ச் நேர மெளனத்துக்குப் பின் ப்ேச்சு தொடர்ந் 'அவியளும் எத்தனையோ சங்கத்துக்குத் தலைவராயிருந்தாவ. ஒரு இடத்திலயும் இப் படிப் பழகல்ல. அந்தப் பழக்கம் எல்லாம் ஆபீசோட போச்சு. உங்க கெமிக்கல் ஆளுக மேல ஆவியளுக்கும் ஒரு அன்பு வந்துட்டுது. கடைசி நேரத்தில் அவிங்ளுக்கு உங்க நினைப்பு தான், ராபின் தம்பி மேல் பெத்த பிள்ளை மாதிரி பாசம் வச்சிருந்தாவ. நீங்கல்லாம் தாய், பிள்ளை மாதிரி பழகிட்டிய. எங்களுக் கும் அவசரத்துக்கு உதவி பண்ண யார் இருக்கா உங்களைத் தவிர?' - - . . . . அந்த வீட்டுப் படி இறங்கினபோது எத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/25&oldid=923166" இலிருந்து மீள்விக்கப்பட்டது