பக்கம்:தீபம் (இதழ்).pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 இழக்கக் கூடாது. மேலும் சக தொழிலாளி கள் சுயநல நேர்க்கம் கருதி யூனியனுக்கு எதி ராக வேலை செய்யலாம். அப்ப அ வ ங் கி மேல ஆத்திரப்படக் கூடாது. தனிமனித விரோதம் கொள்ளக் கூடாது. எவ்வளவு மோசமானவனுயிருந்தாகூட அவன் நம்ம சகோதர தொழிலாளின்னு நினைக்கணும். நடக்கு ஒரே ஒரு எதிரிதான் உண்டு அது முதலாளியும், அவைேட அடிவருடி நிர்வாக மும்தான். நம்மோட பலத்தை எல்லாம் நம்ம் எதிரி மேலதான் பிரயோகிக்கணும். அப்புறம் இன்னெரு முக்கியமான சமாச் சாரம் உண்டு. பொதுநிதியை வச்சி செல வளிக்கிறவங்க அதுக்கு சரியான கணக்கு வச்சி ஜாக்கிரதையாக செலவளிக்கனும். . . நிறைய யூனியன் சீரழிஞ்சி போனதுக்கு தவ முன முறையில் கையாளப்பட்ட நிதி வசதி கள்தான் காரணம்." - அன்று அண்ணுச்சியிடமிருந்து விடை பெற்று வீட்டுக்குத் திரும்பியபோது எல் லோர் மனங்களிலும் அ ண் ணு ச் சி தா ன் நிறைந்திருந்தார். • (தொடரும்) இரண்டு கவிதைகள் ஆர் சூடாமணி முரண கைம்பெண்ணின் கண்ணிர் ஆறுதல் பெறவென்று கோவிலுக்கு அவளை அனுப்பினர்கள். அங்கே- х தேவி அலங்காரியாய் பூவும் புத்தாடையுமாய் தேவனுடன் இணைந்து நின்ருள்: இன்னுெரு நான் சாத்வீகம் என்றுதான் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறேன். வன்முறை என்று கேட்டாலே மனம் பதறி நடுங்குவேன். எங்கோ கொலே நடந்தால் இரவெல்லாம். துரங்க் மாட்டேன். யாரோ துன்புற்ருல் . " .. என் கண்ணில் நீர் வடிப்பேன். அஹிமசாலாதி என்று தான் என்னை o எண்ணிக்கொண்டிருக்கிே றன். ங்ொய்ய்ய். காதுக்குள் பாட்டுப் பாடி சுற்றிச் சுற்றிக் கொத்தும் கொசுக் கூட்டம். . . காலில் கையில் முகத்தில் கழுத்தில் சுரீர் கரீர் சுரீர்... விரட்ட விரட்டப் பறந்து போய் திரும்பி வந்து வட்டமிட்டு ரீங்கரித்து &#ffff i . சுவாரஸ்யமாய்ப் புத்தகம் படிக்கையிலே சுரீர் ! - கழுத்துப் போர்வையை நீக்கி பக்கம் திரும்பக் கை நீட்டினல் ੰ ! off ! கொசுவா தேளா? . * ஒடோமாஸ் சுருள்வத்தி பேகான் ஸ்ப்ரே எதற்கும் மசியாத கூர் ஊசிக் கூட்டம். ஆத்திரம் பிரிவர எழுந்து உட்காருகிறேன். போர்வையைக் களைகிறேன். புத்தகம் எடுக்கிறேன். -படிக்கவல்ல. . . . . இங்குமங்கும் பார்வையோட்டி ரீங்காரக் கறுப்புச் சுரீர் அருகில் வர, உதடு கடித்து ஆவேசமாய்க் கையுயர்த்தி வலிழையெல்லாம் ஒன்று சேர்த்துப் போடுகிறேன் ஓர் அடி புத்தகத்தால். செத்து விழும் கொசுவை நோக்க உள்ளே ஒரு - கொலைகள்ர் மகிழ்ச்சி. அஹிம்சாவாதி என்றுதான் என்ன எண்ணிக்கொண்டிருந்தேன்... II

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/27&oldid=923168" இலிருந்து மீள்விக்கப்பட்டது