பக்கம்:தீபம் (இதழ்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சார தி நீர் வாழ்க! பாரதத்தை வாழவைக்கப் பாட்டெழுதிப் பாட்டெழுதிப் பூரதத்தில் ஏறிவிட்ட பொன்மகன் பாரதியின் பாதையினில் நடந்திட்ட பார்த்த சாரதி! சாதனைகள் பலகண்ட சத்திய உபாசக! பிறந்த மண் சிறந்திடப் பற்பல வகையிலும் அரும்பணி புரிந்திட்ட ஆர்வமிகு தமிழ! குணம் நிறை பூரணி கொள்கை அரவிந்தன் மணம் நிறை காதலின் மலரொன்று தந்தீர்! நெஞ்சக் கனல் கொண்டு நெற்றிக் கண் திறந்தீர்! அஞ்சாத சத்தியம் அணிகின்ற பொன்விலங்கு . சமுதாய வீதியினைச் சீராக்க நீரெழுதிய தேவிமைந்தன் அமுதான ஒவியங்கள் அத்தனையும் காவியங்கள் - பொங்கிவரும் சீலங்கள் சங்கமிக்கும் எழுத்துக்கள் - கங்கை இன்னும் வற்றவில்லை! கடைசிவரை வற்ருது! . கோபுர தீட்மெனக் கொள்கைத் தீரமுடன் திபமொன்று ஏற்றினர், திக்கெட்டும் தமிழ் விளங்க! எழுத்திலே பேச்சிலே எதிலுமே இளமை அழுத்தமிகு கொள்கை அழகுமிகு ரசனை எழுத்துக்கு இலக்கியமாய் எழிலுற வாழ்ந்தாய்! அழகு தமிழ்ச் செல்வ! அன்பு மணி வண்ண ! எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம் என்று அழகொழுகச் சொன்ற அமரகவி பாரதி பாதையினில் சென்றிட்ட பார்த்த சாரதி: பூதலத்தினில் உன்பெயர் என்றும் வாழ்க!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தீபம்_(இதழ்).pdf/36&oldid=923178" இலிருந்து மீள்விக்கப்பட்டது